அட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து கினிகத்தேனை கலுகல என்ற பகுதியில்




க.கிஷாந்தன்-

ட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து கினிகத்தேனை கலுகல என்ற பகுதியில் பொல்பிட்டிய பிரதேச மக்கள் 80ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்.

12.12.2017 அன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.

நீர் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பொல்பிட்டிய பகுதியில் வசித்து வந்த மக்கள் மின் உற்பத்தி நிலையத்தின் வேலைத்திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பல வருட காலமாக முகங்கொடுத்து வந்துள்ளனர்.

35 குடும்பங்களை சேர்ந்த 80ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் அவர்களின் குடியிருப்புகளும் அங்கு வெட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எமது குடியிருப்புகள் பாதிப்புகளுக்கு புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையம் வீடுகளை கட்டுவதற்கு நஷ்டஈடுகளை தரும்படியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த காலங்களில் இவர்களுடைய போராட்டம் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் இவர்கள் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல எனும் இடத்தில் வீதியை மறித்தும் வீதியில் அமர்ந்தும் போராட்டத்தை நடத்தினர். இதனால் இப்பகுதிக்கான போக்குவரத்து இரண்டு மணி நேரமாக தடைப்பட்டதுடன், பயணிகள் மற்றும் பதாசாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

கினிகத்தேனை பொலிஸார் மற்றும் அட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் ஸ்தலத்திற்கு விரைந்து வீதியை மறைக்காது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்படி வழியுறுத்தப்பட்டும், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆர்ப்பாட்டகாரர்களை பொலிஸார் அவ்விடத்திலிருந்து விலக்கினர். அதன் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் புரோட்லேன்ட் நீர்மின்சார நிலையம் அமைந்திருக்கும் பகுதிக்கு சென்றதன் பின்பே வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட வேண்டாம் என்ற நீதிமன்ற உத்தரவை பொலிஸார் அவ்விடத்திற்கு கொண்டு வந்தனர்.

இது காலம் கடந்த ஞானம் என ஆர்ப்பாட்டகாரர்களால் தெரிவிக்கப்பட்டது. நீர்மின்சார வேலைத்திட்டத்திற்கு அருகில் உள்ள சுரங்கப்பாதைக்கு ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷ்டியாக சென்று இத்திட்டத்தை நிறுத்துமாறு கோஷமிட்டதோடு, சுரங்காபாதையை முற்றுகையிட்டனர்.

அதேவேளை தமக்கான நஷ்டஈட்டு தொகையை வழங்கு என ஆக்ரோஷத்துடன் தெரிவித்தனர். புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தின் வேலைத்திட்டத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மாதாந்தம் 30,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எமக்கு 30,000 ரூபாய் நஷ்டஈடு வேண்டாம். வீடமைத்து வாழக்கூடிய பெருந்தொகையான பணத்தொகை வேண்டும் எனவும், அல்லது வீடு அமைத்து தரும்படியும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை இவர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -