வவுனியா தோணிக்கல்லில் குடி நீர் தொகுதி மற்றும் கட்டிட திறப்பு விழா.!படங்கள்


 வுனியா தோணிக்கல் கிராமத்தில் இளங்கோ இளைஞர் கழகத்தின் இளைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட பொது மலசல கூடம் அமைத்தல், குடி நீர் தொகுதி அமைக்கப்பட்டு அதன் கட்டிட திறப்பு விழா அண்மையில் கழகத்தின் தலைவர் திரு நிதர்ஷன் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் திரு செ.மயூரன், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன், நிஸ்கோ இணைப்பாளர் திரு ரி.அமுதராஜ், திடீர் மரண விசாரணை அதிகாரி திரு லாசர் , கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.​

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -