பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நிர்மானிக்கப்பட்டுள்ள சித்தீக் நதீர் திறந்த மேடை திறப்பு விழாவும்,மேல் மாடிக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வும். செவ்வாய்க்கிழமை(05-12-2017) அதிபர் பி.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதிகளாக சகோதரர்களான சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சித்தீக் ஜெமீல்,மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சித்தீக் நதீர்,விஷேட அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் கே.எம்.றிஸ்வி அஹ்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சகோதரர்களான சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சித்தீக் ஜெமீல்,மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சித்தீக் நதீர் ஆகியோரின் நாற்பத்தைந்து இலட்சம் ரூபா நிதியில் இந்த திறந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் தளத்தில் நிர்வாகக்கட்டம் அமைப்பதற்கும் இவர்கள் நிதி ஒதுக்கியுள்ளனர்.இதற்கான அடிக்கல்லும் நடப்பட்டதுடன் திறந்த மேடையின் நினைவுக்கல்லும் திரை நீக்கம் செய்யப்பட்து. இங்கு பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார், மற்றும் உதவி அதிபர்களும்.ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.