வருவாரா, வர மாட்டாரா என பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்குவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு நாட்களாக தனது இரசிகர்களுடன் நடத்திவந்த ஆலோசனையின் பின் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ரஜினிகாந்த், எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமிழகத்தின் ஒட்டுமொத்த 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்குத் தொண்டர்கள் யாரும் தேவையில்லை என்றும் நாட்டைக் காக்கும் காவலர்கள் மட்டுமே வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த அறிவிப்பை உலகெங்கும் உள்ள அவரது இரசிகப் பெருமக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.