கிளிநொச்சி மாவட்டத்திலும் ஆசனப் பங்கீட்டில் புளொட் ஏமாற்றப்பட்டது-



Varatharasa Piratheepan-

ள்ளூராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்டத்திலும் மீறிவிட்டது என புளொட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட வேண்டிய 20சத வீதத்தினை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கு (புளொட்) வழங்க முடியாது என்றும், தாம் விரும்பிய இடங்களில் ஒரேயொரு ஆசனம் வீதமே தரமுடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்ததையடுத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) தமது தரப்பில் எந்த ஒரு வேட்பாளரையும் வழங்காமல் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. 

இதுபோன்ற ஒரு நிலைமையே திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -