புகையிரத பாதையில் மண்சரிவு.....



க.கிஷாந்தன்-

துளை கொழும்பு பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 115வது மைல் கட்டைப்பகுதியில் 20.12.2017 அன்று இரவு 11 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.

இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் தரித்து வைக்கப்பட்டது.

அதன்பின் பாதிப்பேற்பட்ட ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் ஈடுப்பட்டனர்.

எனினும் 21.12.2017 அதிகாலை 2.00 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக தலவாக்கலை புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் தரித்து வைக்கப்பட்ட இரவு நேர தபால் ரயில் கொழும்பை நோக்கி புறப்பட்டது.

20.12.2017 அன்று மலையக பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாகவே இந்த புகையிரத பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -