இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சிதி முஹம்மட் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக சிறுபான்மையினர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
மாவனல்லையைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். எம். பாரூக்கின் புதல்வரான சிதி பாரூக், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக கடமையாற்றி வந்த நிலையிலேயே தற்போது கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றி வந்த சட்டத்தரணி சுதர்ஷண குணவர்தன, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே சிதி பாரூக் நியமிக்கப்பட்டள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நேற்று அமைச்சில் வைத்து வழங்கி வைத்தார்.
தொலைத்தொடர்பு மற்றும் நீடித்து நிலைக்கத்தக்க சக்தி வளத் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட சிதி பாரூக், நிதி அமைச்சின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.