சாய்ந்தமருது பிரகடணத்தின் பிரகாரம், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சாய்ந்தமருதில் உள்ள 17 கிராம நிலதாரி பிரிவுகளை உள்ளடக்கிய 06 வட்டாரங்களுக்குமான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு (2017.12.18 - திங்கட்கிழமை) சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மாஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவரும் இந்த சுயேற்சைக் குழுவின் தலைவருமான அல்ஹாஜ். வை.எம்.ஹனீபாவினால் அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் பின்வருவோர் நியமனப் பத்திரத்தில் பெயர் குறிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
@. 1,3 கிராம நிலதாரி பிரிவுகள்,
வட்டாரம் - 18
ஜலீல் (ஜவாஹிர்)
தொழிலதிபர்.
டவுன் ரவல்ஸ் உரிமையாளர்.
@. 2,4,6 கிராம நிலதாரி பிரிவுகள்,
வட்டாரம் - 19
முஹர்ரம் பஸ்மீர்
தொழிலதிபர்
@. 5,7,9 கிராம நிலதாரி பிரிவுகள்,
வட்டாரம் - 20
முகம்மது அஸீம்
தொழிலதிபர்
மெகா சேல் நிறுவன உரிமையாளர்.
@. 8,10,12 கிராம நிலதாரி பிரிவுகள்,
வட்டாரம் - 21
ஆயிஷா சித்தீக்கா
சட்டத்தரணி
@. 11,13,15 கிராம நிலதாரி பிரிவுகள்,
வட்டாரம் - 22
அப்துல் றபீக்
நில அளவையாளர்
@. 14,16,17 கிராம நிலதாரி பிரிவுகள்,
வட்டாரம் - 23
சகோ. அப்துல் அஸீஸ்
ஆங்கில ஆசிரியர்
மேற்படி 6 வேட்பாளர்களுக்கு மேலதிகமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஏனைய ஊர்களான கல்முனைக்குடி, கல்முனை நகரம், இஸ்லாமபாத், மருதமுனை, நட்பிட்டிமுனை அடங்கலான சகல பிரதேசங்ளுக்குமாக எஞ்சிய 17 வட்டாரங்களுக்கும் வேட்பாளர்களை நியமனம் செய்யும் இறுதிக்கட்ட நியமனப் பத்திர தயாரிப்பு நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படுமென எதிபார்க்கப்படுகின்றது.