அஷ்ரப் ஏ சமத்-
கலாச்சார அலுவலகள் திணைக்களத்த்தினால் அரச கலாபுஷண அரச விருது விழா இன்று(12) கொழும்பு தாமறைத் தடாக அரங்கில் வழங்கப்பட்டது தமிழ் 18 முஸ்லீம் 12 கலைஞா்கள், சிரேஸ்ட ஊடகவியாளா்கள், நாடகம், இலக்கியம் , இசை, நடனம், போன்ற கலைத்துறைகளுடன் தொடா்புடையவா்களுக்கு வாழ்நாளிள் அரச விருதுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் அமைச்சா் எஸ்.பி நாவின்ன, பிதியமைச்சா் பாலித்த தேவப்பெரும, அமைச்சின் செயலாளா் டி.சுவா்னபால, கலாச்ரத் திணைக்களத்தின் பணிப்பாளா் அனுசா கோகுல பெர்ணாந்து. கலைச்செல்வன், புரவலா் ஹாசீம் உமா, ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபா் அரசரத்தினம் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனா். இக் கலைஞா்களுள் சிரேஸ்ட ஊடகவியலாளா் என். எம். அமீன், மற்றும் பரீல், உட்பட தமிழ் முஸ்லீம் 30 கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.