ஈரானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கமான்று ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் அது 6 புள்ளி 2 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் தரைமட்டமானதால் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் கெர்மான் மாகாணத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
சுமார் 8 லட்சம் பேர் வசிக்கும் இப்பகுதியில் நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்காக அவசர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் செயடதிகள் தெரிவிக்.
நிலநடுக்கம் காரணமாக 6 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து அப்பகுதியில் நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.