181 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய இலங்கை அணி
16 ஓவர்கள் முடிவில் 87 ஓட்டங்கள் பெற்ற நிலையில் சகல விக்கெட்டையும் இழந்து மோசமான தோல்வியை தழுவியது. இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீர்ர்களாக களமிறங்கிய தரங்க 23 ஓட்டங்களையும் திக்வெல்ல 13 ஓட்டங்களையும் பெற்றபோது ஆட்டமிழந்தனர். ஆனால் இலங்கை அணிக்கு மிக நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா 19 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த வேளை ஆட்டமிழந்து வெளியேறினார்.ஏனைய அனைத்து வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.இந்திய அணி சார்பாக சகால் 4 விக்கெட்டையும் பான்ட்யா 3 விக்கெட்டையும் யாதேவ் 2 விக்கெட்டையும் உன்கந்த் ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.
இந்தியா - இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது. மூன்று டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டி கட்டாக் நகரில் நேற்று தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் திஷர பெரேரா களத்தடுப்பை தேர்வு செய்தார்.
அதன்படி, ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 5-வது ஓவரில் மெத்யூஸ் பந்தில் ரோகித் சர்மா 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது.
ஆட்டத்தின் 13-வது ஓவரை வீசிய பிரதீப் ஷ்ரேயாசை ஆட்டமிழக்கச் செய்தார். 24 ஓட்டங்கள் எடுத்த ஷ்ரேயாஸ் பெவிலியன் திரும்ப தோனி களமிறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாட அணியில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 15-வது ஓவரில் 61 ஓட்டங்கள் எடுத்த ராகுல், பெரேரா பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் துடுப்பெடுத்தாட வந்த மணிஷ் பாண்டே 2 சிக்சர்கள் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 180 ஓட்டங்களை எட்டியது. இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் மெத்திவ்ஸ்,பெரேரா,விஸ்வா பெர்னாண்டோ தலா ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.இலங்கை அணி சார்பாக விஸ்வா பெர்ணான்டோ தனது கன்னி 20க்கு 20 போட்டியில் களமிறங்கினார்.இரு அணிகளும் ஆடும் 2 ஆவது போட்டி நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறுகிறது
போட்டியின் நாயகனாக உஸ்வேந்தர சகால் தெரிவானார்.