சுலைமான் நாஸிறூன்-
அந்நூர் சமூக நல இளைஞர் அமைப்பு மற்றும் HELP TECH அமைப்பு ICBT CAMPUS நிறுவனத்தின் அனுசரனையில் அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்த "YOUTH TECH DAY - 2017" Microsoft Azure Youth Conference நிகழ்வு அந்நூர் சமூக நல இளைஞர் அமைப்பின் தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஷ் றகுமத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் 2017.12.09 திகதி சாய்ந்தமருது பேர்ல்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சி ரேஷ்ட விரிவுரையாளர் MBM. இர்ஷாத், சிறப்பு அதிதியாக ICBT CAMPUS நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் திரு.கஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இம்மாநாட்டில் அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் பங்குபெற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.