உகந்தமலையில் தைப்பூசத்திருநாள் பெருவிழா! அன்று சந்திரகிரகணம்: பி.ப.4மணிக்கு முன்பே பூசைகள்!

காரைதீவு நிருபர் சகா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த
தைப்பூசத்திருநாள் பெருவிழா எதிர்வரும் புதன்கிழமை(31.1.2018) நடைபெறும்.
அன்றைய தினம் சந்திரகிரகணம் பி.ப.5.18க்கு தொட்டு இரவு 8.42க்கு மோட்சம்
அடைவதால் அன்றைய தைப்பூச நிகழ்வுகள் யாவும் பி.ப.4மணிக்கு முன்பாகவே
நடைபெறும் என ஆலய நிருவாகசபைச் செயலாளர் கு.ஸ்ரீபஞ்சாட்சரம்
தெரிவித்தார்.

அன்று(31.1.2018) காலை 10மணிக்கு பாற்குடபவனி மலைக்கோயில் வள்ளிநாயகி
ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. பால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக
ஸ்ரீபஞ்சாட்சரம் கூறினார்.

பி.ப. 1மணிக்கு திருவிளக்குப்பூஜை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை அலங்கார
பூஜை தொடர்ந்து சுவாமி உள்வீதி வெளிவீதி உலாவரலும்
இடம்பெறும்.திருவிளக்குப்பூஜைக்கான ஆயத்தங்களுடன் அடியார்கள்
வருகைதரவேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.

அன்று பகல் அன்னதானம் வருடாந்த உபயகாரர் மட்.ஆசிரியர்கலாசாலை ஓய்வுநிலை
அதிபர் வே.இலட்சுமிசுந்தரம் அவர்களால் வழங்கப்படும்.

விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக செயலாளர்
ஸ்ரீபஞ்சாட்சரம் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -