அடுத்த வருடம் கல்குடாவில் 4200 பேருக்கு வேலைவாய்ப்பு! - அமீர் அலி.


ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
ங்களால் முடிந்தளவு கல்குடா பிரதேசங்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை மக்களாகிய நீங்கள் எங்களிடம் கேட்காமலேயே செய்திருக்கின்றோம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து போட்டியிடும் மீராவோடை மேற்கு வட்டார வேட்பாளரும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஓட்டமாவடிக்கான அபிவிருத்தி இணைத் தலைவருமான எல்.ரீ.எம்.புர்கான் அவர்களின் தேர்தல் அலுவலகம் திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்சொன்னவாரு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு அவர் பேசுகையில்,

நாங்கள் ஒரு வருடத்திற்கு இரண்டுமுறை மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளோம் மீன்பிடி, விவசாயம், சுயதொழில் போன்ற அத்தனை உதவிகளையும் வழங்கியுள்ளோம் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலின் பின்னரும் வழங்கவுள்ளோம்.

எதிர் வரும் வருடம் வாழைச்சேனை கடதாசி ஆலையில் பிரமாண்டமான தோல் பதனிடும் ஆலை அமையப் போகின்றது அத் தொழிற்சாலைக்கு வேலைக்காக 4200 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் இதனூடாக பலருக்கு இதில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -