பல்கலைக்கழக தரப்படுத்தலில் தென்கிழக்குப் பல்கலைகழகத்துக்கு 7 ஆம் இடம்


டந்த 2005 ஆம் ஆண்டுமுதல் சர்வதேச ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை,கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து தரப்படுத்திவரும் uniRank என்ற சர்வதேச புகழ்பெற்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு 7 ஆம் இடத்தை இன் நிறுவனம் வழங்கியுள்ளது.

200 நாடுகளிலுள்ள 13000 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தரவரிசைப் படுத்தலிலேயே இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு 7 ஆம் இடம் கிடைத்துள்ளது.

குறித்த தரப்படுத்தலில் கொழும்பு பல்கலைக்கழகம் முதலாம் இடத்தையும் இரண்டாம் இடத்தை மொரட்டுவ பல்கலைக்கழகமும் பெற்றுள்ளது.

பழமைவாய்ந்த யாழ் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களை பின்தள்ளி குறித்த இடத்தை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம், தனது 23 வருடகால பயணத்தில் இவ்வாறான இடத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்கலைகழகத்தின் இவ்வாறான முன்னேற்றத்துக்கு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், பதிவாளர் எச்.அப்துல் சத்தார், நூலகர் மற்றும் பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் நிருவாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா ஊழியர்கள் என அனைவரதும் முயற்சிகளும் உள்ளடங்கும்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -