பதுளை தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருமதி ஆர். பவானியை முழந்தாலிட செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் முன்னிலையாகுமாறு 7 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஊவா மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சந்த்யா அம்பன்வல உள்ளிட்ட 7 பேருக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சந்த்யா அம்பன்வல, மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்நாயக்க, வலய கல்வி பணிப்பாளர் ரணசிங்க, பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாகாண சபை உறுப்பினர்கள் 3 பேர் உள்ளிட்ட 7 பேரை, நாளை (25) காலை 10.00 மணிக்கு இவ்வாறு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட நபராக அப்பாடசாலையின் அதிபரும், முறைப்பாட்டாளராக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஆகியோரைரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -