முல்லை மாவட்ட துணுக்காய் பிரதேசத்தில் சூறாவளிப் பிரச்சாரத்தில் சுதந்திரக் கட்சி.....


டைபெறும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் எம்.பி மஸ்தான் ஈடுபட்டுள்ளார்.

இன்று தனது அணியினருடன் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பல்வேறு வட்டாரங்களில் தேர்தல் அலுவலகங்களை திறந்து வைத்ததுடன் மக்கள் சந்திப்புக்களையும் மேற்கொண்டார்.

தவிரவும் இன்று தனது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரச்சாரக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக உரையாற்றி வருகிறார்.துணுக்காய் பிரதேச சபை பிரிவு பாரதிநகர் வட்டாரம் 8ல் போட்டியிடும் போட்டியிடும் ரா.சன்சியா மற்றும் கு.துவாரகன் ஆகியோரின் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் காதர் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் எமது இந்தப் பிரதேசத்தினை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து முன்னேற்றமடையச் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது எமது வன்னி மாவட்டம் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவில் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அரசியல் அதிகாரமின்மையே என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி பதவியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்தான் இருக்கிறார் என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்ததேர்தலில் நாம் காணும் வெற்றியிலேதான் இந்தப் பகுதிகளின் அபிவிருத்தி தங்கியிருப்பதால் எமது வாக்குகளை வீணாக்காமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் எமது வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இக்கூட்டங்களில் பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -