காட்டிக் கொடுத்ததால் வந்தவிணை - மாணவன் தூக்கிட்டு தற்கொலை சம்பவம்



க.கிஷாந்தன்-
பாடசாலையில் களவாடிய சம்பவம் ஒன்றில ஈடுப்பட்டதாக கூறப்படும் மாணவன் தொடர்பாக அப்பிரதேசத்தில் குறித்த அரசியல் பிரதிநிதி ஒருவரால் மாணவன் தொடர்பில் அட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விசாரணையை மேற்கொண்ட அட்டன் பொலிஸார் குறித்த மாணவனை விசாரித்த போது அம்மாணவன் மேலும் சில சகாக்களை பொலிஸாரிடம் காட்டிக்கொடுத்துள்ளார்.

இவ்வாறு குறித்த மாணவனால் காட்டப்பட்ட சகாக்களின் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டதை அவ்வீட்டார்கள் ஆட்சேபித்து காட்டிக்கொடத்த மாணவன் மீது சொற்பிரயோகங்களை மேற்கொண்டதால் அவமானம் தாங்க முடியாத அம்மாணவன் தூக்கிட்டு மரணமான சம்பவம் ஒன்று அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபோட்சிலி தோட்டத்தில் 25.01.2018 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த முத்துகுமார் பிரசாந்குமார் (வயது – 14) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் சடலம் சட்ட மருத்துவ விசாரணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலையில் களவாடிய சம்பவம் தொடர்பாக குறித்த மாணவனை சகாக்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிலர் தகாத வார்த்தையில் பேசியமைக்காக வீட்டில் தனிமையில் இருந்த போதே குறித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவன் அணிந்திருந்த ஆடையின் பையில் இருந்து கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -