சாய்ந்தமருது தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில் 2018-01-14 ஆம் திகதி கல்முனை மாநகரசபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கியதேசியக் கட்சியில் 21 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் எம்.எம்.முகம்மது பாமியின் தேர்தல் அலுவலக திறப்புவிழாவும் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது.
எம்.எம்.முகம்மது பாமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னைய கல்முனை பிரதேச சபையின் உறுப்பினரும் சாய்ந்தமருதுக்கான தேர்தல்குழு தலைவருமான ஏ.எல்.எம்.றசீட் (புர்கான்ஸ்) பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மிகுந்த சலசலப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கல்முனை மாநகரசபைக்கான முஸ்லிம் காங்கிரஸ் சார்பு வேட்பாளர்களான முன்னாள் பிரதி முதல்வர்கள் ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவருமான ஏ.சி. யஹ்யாகான், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.நஸார்டீன், ஏ.எம்.முபாறக் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கலகம் அடக்கும் பொலிசாரும் கடமையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.