பைஷல் இஸ்மாயில் -
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பாரம்பரிய வைத்திய சேவையை வழங்கிய வைத்தியர் ஈ.வைரமுத்து அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை மதியம் 12.00 மணியளவில் குறித்த வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தெரிவித்தார்.
இதன்போது, அவரின் கடந்தகால சேவைகளை ஞாபகமூட்டி, பாராட்டி கெளரவித்து பொண்ணாடை போர்த்தி ஞாபகச் சின்னமும் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.