ராஜித சேனாரத்ன பேசினால் பொய் செய்தால் மாறுபாடு ; இபாஸ் நபுஹான் சாடல்


மைச்சர் ராஜித பேருவளைக்கு சென்று முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸவை கள்ளன் என கூறி கூறியே காலத்தைகடத்தாமல்,இவ்வாட்சி காலத்தில் அம்மக்களுக்கு பெற்றுக்கொடுத்தவிடிவு என்ன என்பது பற்றி பேச முடியுமா என பாணதுறை பிரதேசசபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அளுத்கமை, பேருவளை என்ற பெயர்களை கேள்வியுற்றாலேஅனைவருக்கும் அங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸகாலத்தில் இடம்பெற்ற கலவரம் தான் நினைவுக்கு வரும். இப்போதுஅங்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள்,அதனை மையமாககொண்ட பிரச்சாரத்தையே மேற்கொள்ள வேண்டும்.அதுவேபொருத்தமானதும் கூட.

ஆகியோர்அளுத்கமை, பேருவளையில் ஐ.தே.கவுக்கான பிரச்சாரநடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பிரதானபேசுபொருளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திருடினார்என்பதே அமைந்துள்ளது.

இடம்பெற்றகலவரத்தில் போது மூன்று உயிர்கள் பறிபோயிருந்தன. அவர்களுக்குநஸ்டயீடு வழங்கப்போகிறோம் என்றார்கள். இதுவரைவழங்கப்படவில்லை. அக் கலவரத்தின் போதான எந்தவொருவிடயத்திற்கும் இவ்வரசால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இவர்களால் எப்படி கலவரம் பற்றி பேச முடியும்? அப்படி பேசுவதானால்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில்மேற்கொள்ளப்பட்ட நஸ்டயீடுகளைத் தான் பேச வேண்டும்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் அளுத்கமை கலவரம் பற்றிஊடகவியலாளர்கள் வினா எழுப்பிய போது, அது பற்றி தனக்குதெரியாது என கூறியிருந்தார். தனது மாவட்ட மக்களது பிரச்சினைபற்றி கரிசனையற்றவர், அங்கு வந்து, தனது கட்சிக்கு வாக்கு கேட்கவெட்கப்பட வேண்டும்.
வினாஎழுப்பிய போது, அக் கலவரத்துக்கு தீர்வுபெற்றுக்கொடுக்கப்பட்டதாகவே கூறியிருந்தார்.இப்படியான ஒரு கட்சிக்குவாக்கு கேட்டுச் செல்பவர்கள் வெட்கப்பட வேண்டும்.

வாக்கு கேட்டு வருவது, வேட்பாளர்களின் உரிமை. அவர்கள் தங்களுக்குஎன்ன செய்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்து வாக்களிப்பதுவாக்காளர்களின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -