நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல சந்தியிலிருந்து மட்டுக்கலைக்கு செல்லும் 3 கிலோமீற்றர் வரையிலான பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி சின்னமட்டுக்கலை,பெரிய மட்டுக்கலை, சென்கூம்ஸ் கீழ் பிரிவு,சென்கூம்ஸ் மேற்பிரிவு,லேங்டேல் தோட்டம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 500 ற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் 20.1.2017 சனிக்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் நானுஒயா ரதெல்ல சந்;தியிலிருந்து சென்கூம்ஸ் வரையிலான 3 கிலோமீற்றர் வரையான பிரதான வீதி காணப்படுகின்றது.குறித்த வீதியை சின்னமட்டுக்கலை,பெரிய மட்டுக்கலை, சென்கூம்ஸ் கீழ் பிரிவு,சென்கூம்ஸ் மேற்பிரிவு,லேங்டேல் தோட்டம் ஆகிய தோட்டப் பகுதி மக்கள் போக்குவரத்து பயன்படுத்துகின்றனர். இ;வ்வீதி மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப்பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகி வந்துள்ளனர். இவ்வீதியை கடந்த மாகாண சபை தேர்தலின் போது தற்போது மத்திய மாகாண சபை உறுப்பினராக இருக்கும் ஒருவர் இவ்வீதியை புனரமைத்து தருவதாக கூறி மக்களிடம் உறுதிமொழி வழங்கியதோடு இவ்வீதியை புனரமைக்க கல்,மணல் கொண்டு வந்து கொட்டியதாகவும் பின்னர் சில மாதங்களின் பின்னர் அப்பொருட்கள் அவ்விடத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். குறித்த வீதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடையும் நிலை ஏற்ப்படுவதாகவும் இவ்வீதியினூடாக வாகனங்களை செலுத்த வாகன சாரதிகள் தயக்கம் காட்டுவதோடு கர்ப்பிணி தாய்மார்களை இப்பாதையினூடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது மிகவும் ஆபத்தாகவுள்ளதாகவும் பாடசாலை மாணவர்களும் இதர தொழில் துறைக்குச் செல்வோரும் உரிய நேரத்திற்கு பாடசாலை மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு இவ்வீதியை சீர்த்திருத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும் என கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுப்பட்டனர். மட்டுக்கலை சந்தியிலிருந்து பேரணியாக அணிதிரண்டு பதாதைகளையும் கோஷங்களையும் எழுப்பியவாறு வந்த அத்தோட்ட மக்கள் ரதெல்ல சந்தியில் வீதியோரமாக நின்று இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.