திருகோணமலை:அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினால் பெண்களுக்கு விமோசனம் கிடைக்கும்




:அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய மகளிர் அணித்தலைவி டொக்டர் ஹப்ஸா முனாசிக்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
பெரியாற்றுமுனை வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் பெரியாற்று முனை வட்டார பகுயின் பெண்களுடனான கலந்துரையாடல் நேற்று (22) திங்கட் கிழமை வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்தில் பெரியாற்று முனை வட்டாரத்தில் போட்டியிடும் நிஸார்தீன் முஹம்மட் தலைமையில் இடம் பெற்றது.இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர் ஹஸ்மியா முனாசிக் மற்றும் க
கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பெண்களுடனான கலந்துரையாடலில் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர் ஹப்ஸா முனாசிக் உரையாற்றுகையில் தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இப் பகுதியிலும் போட்டியிடுகிறது இம் முறை பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் நாட்டின் ஜனநாயகத்துக்கு முதன்மையளிப்பதுடன் பெண்களின் அரசியல் பங்குக்கு வழிவகுக்கின்றது ..உண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதனால் பெண்களின் பொருளாதார வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் பொருளாதார தடைகளை தகர்த்தெரிந்து பெண்களுக்கான சுயதொழில் வழிகாட்டல்களையும் இப்பகுதியில் போட்டியிடும் வட்டார வேட்பாளர் நிஸார்தீன் முஹம்மட் ஊடாக பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளோம் இதற்காக எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியூதீன் பல ரூபாய்க்களை எதிர்காலத்தில் ஒதுக்கீடு செய்யவுள்ளார் 

உங்களின் பிரதேச நலன்களை மக்களுடைய அபிலாஷைகளை எமது தேசிய தலைமை அறிந்துள்ளது.எனவே மக்களுக்காக நாங்கள் என்றும் எமது சமூகத்துக்காக முன் நிற்போம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதனால் முஸ்லீம் சமூகத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -