மலையை உடைக்கப்பபோவதாக வாக்குறுதிகளை வழங்கியவா்கள் மண்சட்டியைக்கூட உடைக்கவில்லை - தேசிய காங்கிறஸ் வேட்பாளர் கவிஞர் ஏ.எல்.எம் றிபாஸ்




ஏ.எல்.எம்.ஷினாஸ் -
லையை உடைக்கப்பபோவதாக வாக்குறுதிகளை வழங்கியவா்கள் மண்சட்டியைக்கூட உடைக்கவில்லை - தேசிய காங்கிறஸ் வேட்பாளர் கவிஞர் ஏ.எல்.எம் றிபாஸ்

உள்ளுராட்சி மன்றித் தேர்தலில் மலையை உடைக்கப் போவதாக வாக்குறுதிகளை வழங்கியவா்கள் மண்சட்டியை கூட உடைக்கவில்லை என தேசிய காங்கிறஸ் கட்சியின் குதிரை சின்னத்தில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர் கவிஞர் சட்டத்தரணி ஏ.எல்.எம் றிபாஸ் தெரிவித்தாா். மருதமுனை வாக்காளா்களுக்கு விளக்கமளிக்கும் பொதுக்கூட்டம்(20) மருதமுனை கடற்கரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தாா். இங்கு மேலும் உரையாற்றுகையில்,

அரசியல் அமைப்புஉருவாக்கத்தில் சிறுபான்மை, முஸ்லிம் மக்களின் வாக்குப்பலத்தில் தங்கியிருக்கும் நிறைவேற்றுஅதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறைமை ஒழிக்கப்படாமல், நிலைத்திருப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடனான தேசியகாங்கிஸ் கட்சிகளின் கூட்டினை வலுப்படுத்துவது அவசியமானதாகும்.

கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைந்து வடகிழக்கில் முஸ்லிம் சமூகத்தை இரண்டாம் தர பிரஜைகளாகும் சதினை முறியடிக்கும் எத்தனங்களை மாநகரசபை மட்டத்திலிருந்து முன்னெடுக்க வேண்டும்.

மூன்று சமூகங்களினதும் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கிய தேசியகங்கிரஸின் பாலமுனை பிரகடனத்திற்கு பலம் சேர்க்கும் பரப்புரைக்கமைவாக மாநகரசபை ஆட்சியை கையாளவேண்டும்
ஒல்லாந்தர் காலத்து கட்டிடம் கல்முனை மாநகரசபைக்கு ஒப்பாரமாக காட்சிதரும் கட்டிடமொன்றை கட்டும் முயற்சிகளை தேசியகங்கிறஸ் கட்சி ஊடாக முன்னேடுப்பது எமது நோக்கமாகும்.

கல்முனையில் 4 உள்ளராட்சி சபை சாத்தியமானால் தேசியகாங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா முன்வைத்த எல்லைகளின் அடிப்படையில் மருதமுனையை மையப்படுத்திய சபையொன்றை பெற்றெடுக்க பாடுபடுவேன். தேசிய காங்கிறஸ் கட்சியின் தலைமை மருதமுனை மண்ணுக்கு பெற்றுத்தந்த

மாகாணசபை உறுப்பினர் பதவி, பிரான்ஸ் சிற்றி நகர் நிர்மானிக்க மண் நிரப்பியமை,அந்நஹ்ழா அரபுக் கலாசார விடுதி, பொதுநூல நீர்த்தாங்கி நிர்மாணம், கஸ்ஸாலி, அக்பர், அல்-மனார், மக்காமடி, மரைக்கார், பனையடி போன்ற கொங்கிறீட் வீதிகள், வேலைவாய்ப்புக்கள் போன்ற சேவைகளை நன்றியுடன் நினைவு படுத்திப் பாா்க்க வேண்டும். இதுபோன்ற சேவைகளை இன்னும் இன்னும் பெற வேண்டும்.

மக்பூலியா வாசிப்பகத்தை வளநிலையமாக்குதல்,பொழுதுபோக்கு பூங்கா அமைத்தல்,கடற்கரை வீதி புனரமைப்பு,மாட்டு மடுவம் நிர்மாணித்தல்,மேட்டுவட்டையின் 3 ஏக்கர் காணியை மீட்டு மண்நிரப்பி மாதிரிக் கிராமம் அமைத்தல் வீதி, வடிகால், கழிவு முகாமைத்துவம்,தெருவிளக்கு பராமரிப்பு போன்ற மக்கள் சேவைகளை வெளிப்படைத்தன்மையோடு நீதமாகவும், நிலையானதாகவும் நிறைவேற்றுதல் எமது இலக்காகும் என்றாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -