ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறை இரண்டாம் வட்டாரத்தில் களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நெளசாத் மஜீதுடைய பட்டியலில் எவரையும் சம்மாந்துறை பிரதேசத்தில் வாழுக்கின்ற மக்கள் ஆதரிக்க கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கடந்த கிழமை ஆறாம் வட்டரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் சபீக் இஸ்மாயிலின் தேர்தல் காரியாலயத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையில் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் உரையாற்றுகையில்.. இத்தேர்தலில் நாங்களோ முஸ்லிம் காங்கிரசோ தோற்கடிக்கப்பட கூடாது. முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம்தான் இலங்கையில் இருக்கின்ற ஒரே ஒரு முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற கட்சியாக இருக்கின்றது. எங்களுடைய எதிரணியினருக்கு எதற்கும் வக்கில்லாத சந்தர்பத்தில் என்னை கள்ளன் என்று கூறுவார்கள் அல்லது எமது தலைவர் ரவூப் ஹக்கீமை களிசர அல்லது பெண் பிடிகாரன் என்று தகாத வார்த்தைகளால் வீன் பழி சுமர்த்துவார்கள்.
இவர்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைவரை பிழையாக சொல்வதையே இவர்களுடைய அரசியல் பிழைப்பிற்கான ஆயுதமாக பயண்படுத்துகின்றனர். மரணித்தவர்கள் கூட தலைவரை பற்றி மிகவும் மோசமாக எமது மக்களுக்கு பிழையாக கூறிவிட்டு சென்றிருக்கின்றனர். அவர்கள் மரணித்தவர்களாக காணப்படுவதினால் அவர்களை பற்றி நான் அசை போட்டுக்கொள்ள விரும்பவில்லை. இந்த கட்சியினை வழி நடாத்தியவர்கள் எமது கட்சியின் தலைமையை பற்றி மக்களுக்கு எவரும் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு பலதையும் பலவிதமாக கூறி மக்களுடைய மனங்களை குளப்பி வைத்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துர் மஜீத் நிறைய தியாகங்கள், நிறைய காரியங்களை மிகவும் நேர்மையாகவும் தியாகத்துடனும் வாக்களித்த மக்களுக்கக செய்து காட்டியவர். அவருடைய காலத்தில் எந்த கேவலமான அரசியல் விமர்சனத்திற்கும் அவர் உட்படாதவர். அதற்கு பிறகு அவருடைய இடத்தினை நிறப்புவதற்காக அவருடைய பரம்பரையில் இருந்து இது வரைக்கும் எவரும் வெளிப்பட்டதில்லை. ஆனால் அவருடைய மருமகனான நெளசாட் மஜீதை அவருடைய பரம்பரை என எடுத்துக்கொண்டு கடந்த தேர்தல்களில் எமது வாக்குகளை பிழையாக அவருக்கு வழங்கியிருக்கின்றோம்.
2001ம் ஆண்டு அன்வர் இஸ்மாயில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பொழுது எமது மக்களை மிகவும் மோசமாக வழி நடாத்தி அவர்களை நம்பவைத்து சுயற்சையிலே முயல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறி சம்மாந்துறை அடங்களாக முழு மாவட்டத்திலும் 17000 வாக்குகளை பெற்றிருந்தார்கள். அந்த 17000 வாக்குகளும் பெறுமதி அற்ற வாக்குகளாக தூக்கி வீசப்பட்டதற்கு சமனாக மாறியிருந்தது. அதே போன்று 2010ம் ஆண்டு 24000 தெரிவு வாக்குகளை சம்மாந்துறை மக்கள் மாத்திரம் நெளசாட் மஜீத் வழங்கியிருந்தார்கள். அவர் மாவட்டத்திலே 8ம் இடத்திற்கு வந்திருந்தார். ஆனால் நான் மாவட்டம் முழுவதிலும் 40000 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்திருந்தேன். அப்பொழுதும் நெளசாத்துக்கு வழங்கப்பட்ட 24000 வாக்குகளும் செல்லாக்காசாகவே மாறியிருந்தது.
அந்த நிலையில் எனக்கு எம்பி-யாக வருவதற்கு தேவைப்பட்டது வெறும் 800 வாக்குகள் மட்டுமே. அதனையும் நெளசாட் இல்லாமல் செய்தார். ஆனால் மறுபக்கத்தில் 24000ம் வாக்குகளை பெற்று எட்டாம் இடத்திற்கு வந்த நெளசாட் இன்னும் 17000 வாக்குகளை பெற்றால்தான் எம்பி-யாக வரக்கூடிய நிலமை இருந்தது. நெளசாட் உண்மையானவர் என்றால்.? கடந்த பாராளுமன்ற தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட வீசி இஸ்மாயிலை ஆதரித்திருக்க வேண்டும். அவருடைய மேடையில் ஏறி பேசியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதும் அவர் செய்ய வில்லை.
ஏன் என்றால்.? தன்னால் பெற்றுக்கொள்ள முடியாமல் போன எம்பி பதவியினை எவரும் சம்மாந்துறை பிரதேசத்தில் பெற்றுவிட கூடாது என்பதில் அவர் குறியாக இருந்து வருகின்றார். அதற்காக அவர் எதனையும் துணிந்து செயற்பட தயாராக இருக்கின்ற ஒருவராகவே இருந்து வருகின்றார். அவ்வாறான ஒரு அசிங்கமான அரசியல் செயற்பாட்டினைதான் நெளசாட் மஜீத் இத்தேர்தலிலும் செய்து கொண்டிருக்கின்றார் என மிகவும் காரசாரமாக மன்சூர் எம்பி போட்டுத்தாக்கினார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான நெளசாட் மஜீதை.
மேலும் மன்சூர் எம்பி உரையாற்றிய கருத்துக்கள் அடக்கிய முழுமையான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ காணொளி:-