சமூக நலனுக்காகவே தேர்தலில் குதித்துள்ளேன் கல்முனையில் மக்கள் சந்திப்பில் அப்துல் மனாப்



எம்.என்.எம்.அப்ராஸ்-

வ் அரிசியலில் தான் விரும்பி களமிறங்க வில்லை என்றும் தனிப்பட்ட ரீதியில் கவலையடைந்து நம் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனையிலும் தான் அரசியல் களத்தில் குதித்துள்ளேன் என்று எதிர்வரும் கல்முனை மானகரசபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் 17ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் அப்துல் மனாப் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரச்சாரக் கூட்டம் எஸ்.எச்.எம்.அஸ்மி தலைமையில் கல்முனை அலியார் வீதியில் கல்முனை 17ம் வட்டார வேடப்பாளர் அப்துல் மனாபை ஆதரித்து (23-1-2018) இடம்பெற்றது . இதில் கலந்து கொண்டு வேடப்பாளர் அப்துல் மனாப் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றுகையில் இந்தக் கல்முனை மண்ண கட்டிடக் காக்க வேண்டும் எமது மக்களுக்கும் இளைஞ்சர்களும் ஓர் தவறான வழிமுறை காட்டடப்படுகின்றது. இவ் விடயமானது மிகவும் கவலைக்குறியது எமது பகுதியில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன அதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது பௌதீக ரீதியான பல பிரச்சினைகள் உள்ளது இதற்காக சரியான முடிவுகளை பெற வேண்டிய நிலை உள்ளது என்றும் நான் இவ் அரசியலைப் பொறுத்த மட்டில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் இந்த வடடார தேர்தல் முறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கிலே இவ் அரசியலில் பிரவேசித்தேன் என்றும் தெரிவித்தார்.

எமது பகுதியானது வளம் பெற வேண்டும். இப் பிரதேசம் சிறந்த முறையில் இருக்க வேண்டும் இப் பிரதேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்தவராக இருக்க வேண்டும் எமது தாய்மார்க்ள் இவ் பகுதியில் தலை நிமர்ந்து வாழவேண்டும் இவ் நிலையானது என்றுமே தொடரவேண்டும் என்பதற்காகவே இவ் வட்டாரத்தில் போட்டியிடுகின்றேன் என்றும் எமது மக்கள் சிலரின் அற்ப வாக்குறுதிகளுக்காக ஏமாற வேண்டாம் என்றும் சிந்தித்து வாக்களிக்கின்ற பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்றும் எமது வாக்கினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இவ் நிகழவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம் அப்துல் ரசாக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் பிரபல அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம் ஜிப்ரி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியும் வேடப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -