கல்முனை கல்வி கலாச்சார மேம்பாட்டு மையத்தின் அப்துல் கபூர் ஞாபகார்த்த கல்லூரியில் சாதாரணதரம் வரை கல்வி கற்று வெளியேறும் மாணவர்களின் விடுகை விழா 2018-01-21 ஆம் திகதி நிறுவனத்தின் தலைவரும் பொறியியலாளருமான இசட்.ஏ.எம்.அஸ்மிர் தலைமையில் இடம்பெற்றது.
நிறுவனத்தின் செயலாளர் எம்.எம்.எம்.நபீலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. வெளிச்செல்லும் மாணவர்களால் நிறுவனத்துக்கு போடியம் ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன் மாணவர்களால் கற்பித்த ஆசிரியர்கள் கௌரவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.