வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்
பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.டபள்யு.எம்.ஜேஸீல்-
இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகளுக்கெல்லாம் முகம்கொடுத்து அவற்றை அடக்குவதற்கும் அதற்கான தீர்வுகளை எட்டுவதற்குமாக உள்ள ஒரேயொரு கட்சியென்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மாத்திரமே என பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார்.
பெரியநீலாவணையில் ஞாயிற்றுக்கிழமை(21.01-2018)நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது :-பெரும்பான்மைச் சமூகத்தால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்று பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தியதோடு அந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வையும் பெற்றுக் கொடுத்த கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான்.
அளுத்கமையில் முஸ்லிம்களின்; பள்ளிவாசல்கள்ääவியாபாரத் தளங்கள்ääவீடுகள்ää வாகனங்கள் அனைத்தும் இரவோடு இரவாக பேரினவாத சக்திகளால் வெளிப்படையாக நின்று உள்ளேயிருந்து மக்கள் வெளியே தப்பித்து செல்லமுடியாதவாறு ஊரை மறித்து தீவைத்தார்கள் இதில் பலகோடிக்கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன அதேபோன்று காலி ஜிந்தோட்டையில் முஸ்லிம் மக்களை அடித்து துன்புறுத்தி பள்ளிவாசல்களுக்கு கல்லெறிந்தனர்.
அந்த இடத்திற்கும் எமது தலைமை நேரடியாகச் சென்று பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினைப் பெற்றுக் கொடுத்தது.ஆனால் மாற்றுக் கட்சிகளிலே உள்ள தலைமைகள் அங்கு சென்று நடந்த சம்பவங்களோடு தாங்கள் பார்வையாளர்களாகச் சென்று விளம்பரப் படங்களை எடுத்துக் கொண்டனர். முஸ்லிம் மக்களுக்காக இவர்கள் செய்தது என்ன?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செல்லப்பிள்ளை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அதேபோல் பஸில் ராஜபக்ஷவின் செல்லப்பிள்ளையான அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் ஆகியோர்; தங்கள் கட்சிகளுக்கு முஸ்லிம் என்ற பெயரைக்கூட வைத்துக் கொள்ளாது பேரினவாதிகளின் சலுகைகளைப் பெற்றுக் கொள்ள தங்கள் கட்சிகளின் பெயர்களை வைத்துக் கொண்டு திரிகின்றார்கள்.
ஏன் அவர்கள் தங்கள் கட்சிகளுக்கு தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்றும் நாமங்களைச் சூட்டவில்லை.ஆக தங்களுக்கு கிடைத்துள்ள பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் சோடை போகும் இவர்கள் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தைப் பற்றிப் பேசுவது?
எனவேääமக்களே நடைபெறவிருக்கும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் கல்முனையில் எமக்குப் போட்டியாக வந்துள்ள அனைத்துக் கட்சிகளையும் தோற்கடித்து எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.