யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மலத்தின் துர்நாற்றம் வீசியதாகக் கூறியதால் அலாஸ்காவில் உள்ள ஆன்கரேஜ் விமான நிலையத்தில், வியாழன்று அது தரை இறக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பயணியால் வேறு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை என்று காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"விமானத்தின் பயணி ஒருவர், தனது மலத்தின் மூலம் கழிவறையைக் கடுமையாக அசுத்தமாக்கிய தகவல் எங்களுக்கு வந்தது," என்று காவல் அதிகாரி ஜோ கமாச்சே தெரிவித்துள்ளார்.
விமான ஊழியர்கள் அவரை இறக்க முயன்றபோது, அந்த நபர் எதிர்ப்பு எதையும் வெளிக்காட்டவில்லை. விமான நிலையத்தில் இருந்த காவல் துறையினர் அவரைக் கை விலங்கிட்டு விமானத்தில் இருந்து இறக்கினர்.
மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் விசாரிக்கப்படும், அமெரிக்காவில் வசிக்கும், வியட்நாமைப் பூர்விகமாகக்கொண்ட அந்த நபருக்கு ஒரு மருத்துவமனையில் மன நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிடம் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
விமானத்தில் இருந்த பயணிகள் தங்க விடுதி வசதி செய்து தரப்பட்டதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.BBC