நேற்று சிறப்பாக நடைபெற்ற கிழக்கு மாகாண பொங்கல் திருவிழா!


காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் பொங்கல்விழா இம்முறை திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலய மைதானத்தில்நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம் நிஷாம் தலைமையில் நடைபெற்ற இப் பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலாநிதி ஸ்தாபகர் உலக சைவ திருச்சபை கனடா ப.அடியார்விபுலானந்தன் சிறப்பு அதிதியாக் செயற்றிட்ட தலைவர் சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித்துறை தேசிய கல்வி நிறுவகம் பொன்.ஜெயரூபன் ஆகியோரும் அழைப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைத்து வலயக்கல்வி பணிப்பாளர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்

இதன்போது பலதரப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளான கும்மி கோலாட்டம் கரகம் மற்றும் கிராமிய விளையாட்டுக்களான கிட்டிபொல்லுகட்டைபந்து கிளித்தட்டு போன்றனவும் நான்கு மதங்களை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

துலை தாங்கிய கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் இப் பொங்கல் விழாவானது தமிழருக்கு மாத்திரம் உரியதல்ல நான்கு மதத்தவரும் கொண்டாட வேண்டியதொரு பொது விழாவாகும் என அவர் தெரிவித்தார்









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -