ஈழத்து பழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான வருடாந்த தேர்த் திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான பிரதமகுரு குருக்கள் தலைமையில் 13ஆம் திகதிமுதல் 26ஆம் திகதிவரையான பதினான்கு நாட்களும் தினசரி காலை பூஜைகள் இடம்பெறும். 22ஆம் திகதி 1008 சங்காபிஷேகமும், அன்னதானமும் இடம்பெற்றது.
23ஆம் திகதி பால்குட பவணி எடுத்துவரப்பட்டு பாலாபிஷேகமும் இடம்பெற்றதோடு, சப்பர திருவிழாவும் இடம்பெற்றது.
24ம் மும்மூர்த்திகள் வெளிவீதியுலா இடம்பெற்றது. சுவாமிகள் தேவஸ்தானத்திலிருந்து வெளிவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்புரிந்து மீண்டும் தேவஸ்தானத்தை வந்தடைந்தது.
25 ஆம் திகதி திருமூர்த்திகளுக்கு பிராயசித்த அபிஷேகம் இடம்பெற்று தீர்த்தோற்சவத்துடன் கொடியிறக்கம் இடம்பெறுகிறது.
26ஆம் திகதி மாலை பூங்காவனத்திருவிழா திருவூஞ்சல் சண்டேஸ்வரர் உற்சவம் இடம்பெற்று வைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறவுள்ளது.
இடம்பெற்ற தேர் திருவிழாவில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.