கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் 1999′ பழைய மாணவர் ஒன்றியமான ‘செஸ்டோ’ அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் அதன் தலைவர் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.
அமைப்பின் புதிய தலைவராக ஏ.எச்.எம்.றிஸான், செயலாளராக எம்.ஏ.எம்.எம்.சிராஜ், பொருளாளராக எஸ்.எச்.எம்.அஸ்மி, பிரதி தலைவராக என்.எம்.றிஸ்மீர், உப செயலாளராக ஏ.எம்.றியாஸ், கணக்காய்வாளராக எஸ்.எம்.ஆரிஸ் அக்பர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் எம்.ஆர்.எம்.பர்ஹான், எம்.சி.எம்.சி.றிலா, எம்.பி.எம்.பௌசான் ஆகியோர் ஜனாஸா நலன்புரிக் குழு உறுப்பினர்களாகவும் யூ.எல்.எம்.சப்ரீன், எம்.எம்.அஹ்சின் ஆகியோர் நண்பர்கள் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாகவும் ஏ.ஜலீல்,
எஸ்.ரீ.எம்.சதாத் ஆகியோர் ஊடக இணைப்பாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.ரீ.எம்.சதாத் ஆகியோர் ஊடக இணைப்பாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வருடாந்த பொது கூட்டத்தில் நடப்பாண்டில் அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலை திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் உறுப்பினர்களுக்கு நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அமைப்புக்கான ரீ சேட் சீருடையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.