காரைதீவு நிருபர் சகா-
கடந்த 30வருடங்களாக தேசியம் என்ற மாயையைக்காட்டி முழுத்தமிழ்மக்களையும்
ஏமாற்றிவந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சந்திக்கின்ற இறுதித்தேர்தல்
இதுவாகத்தானிருக்கும். இந்தக்காரைதீவு மண்ணிலிருந்துதான் அதற்கான
பிள்ளையார்சுழி விடுக்கப்படுகின்றது.காரைதீவானின் தனித்துவம் 10ஆம்திகதி
சுயேச்சையின் வெற்றிவாகையூடாக முழு உலகிற்கும் பறைசாற்றப்படும்.
காரைதீவு பிரதேசசபைக்கான சுயேச்சைக்குழு-1 இன் வேட்பாளர் சின்னத்தரை
நந்தேஸ்வரன் நேற்று(22)மாலை காரைதீவு வடக்கு 3ஆம் வட்டாரத்திற்கான
சுயேச்சைக்குழு தேர்தல் அலுவலகத்திறப்புவிழாவில் உரையாற்றுகையில்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இத் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை ஊர்ப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு
திறந்துவைத்தார்கள். சுவாமி விபுலானந்த பணிமன்ற பொருளாளரும் ஓய்வுநிலை
வங்கிமுகாமையாளருமான ச.ருத்திரன் உத்தரவுபெற்ற நிலஅளவையாளர் நீதிமன்ற
ஆணையாளர் வே.இராஜேந்திரன் ஓய்வுநிலை கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர்
ரி.பி.புவனராஜா சிரேஸ்ட்ட தொழினுட்ப உத்தியோகத்தர் செ.மணிச்சந்திரன்
புளொட் பிரதிநிதி சங்கரி ஆகியோருட்பட பல பிரதிநிதிகள் திறந்துவைத்தனர்.
ஊர்ப்பொதுத்தீர்மானத்திற்கமைவாக சுயேச்சைக்கு விட்டுக்கொடுத்து
ஒதுங்கிநிற்கின்ற தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் புளொட் ரி.எம்.வி.பி.
ஈபிடிபி முக்கியஸ்தர்கள் வரிசையில் நேற்றைய கூட்டத்திற்கு புளொட்
அமைப்பின் சிரேஸ்ட முக்கியஸ்தர் ரவிச்சந்திரன் சங்கரியும் கலந்தகொண்டு
குத்துவிளக்கேற்றிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
3ஆம் வட்டார சுயேச்சைக்குழு வேட்பாளர் சி.நந்தேஸ்வரன்; தலைமையில்
இடம்பெற்ற இத்திறப்புவிழாவில் சக வேட்பாளர்களான கே.குமாரசிறி திருமதி
மதிவதனி;; மா.புஸ்பநாதன்; ஆ.பூபாலரெத்தினம் ந.ஜெயக்காந்தன் ச.சசிகுமார்
சி.தேவப்பரியன்உள்ளிட்ட வேட்பாளர்களும் சமுகஆர்வலர்களான இ.குணசிங்கம்
வெ.ஜெயகோபன் ஆகியோரும் கலந்துகொண்டுரையாற்றினார்கள்.
அவர் மேலும் உரையாற்றுகையில்:
தமிழ்த்தேசியம் உரிமை காக்க புறப்பட்டவர்கள் கேவலம் இன்று சாராயமும்
தகரமும் அரிசியும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 3வருடகாலமாக ஓடாத
சிவப்ப வெள்ளை நிற வாகனங்கள் இரவுபகலாக ஓடுகின்றன. இதெல்லாம்
எமக்குக்கிடைத்த ஆரம்ப வெற்றிகள்.
மண்ணையும் மக்களையும் காக்கப்புறப்பட்ட மீன்சின்னத்தின் சுயேச்சை
வென்றதும் இன்னும் எத்தனையோ பேர் வருவார்கள்.
ஜ.நா.வுக்கு தமிழரின் பிரச்சினையை கொண்டுசென்றவர் அதிமேதகு தலைவர்
பிரபாகரன் அவர்களே. அதைமறந்து நாம்தான் கொண்டுசென்றோம் என்றுகூறி மக்களை
அதுவும் காரைதீவார்களை மடையனாக்கப்பார்க்கிறார்கள். அந்தக்காலம்
மலையேறிபோய்விட்டது. இம்முறை காரைதீவான் சோரம் போக மாட்டான்.
முஸ்லிம் சகோதரர்கள் உரிமையைக்கேட்கின்ற அதேவேளை அபிவிருத்தியையும்
செய்துகொண்டிருக்கிறார்கள். நீங்களோ உரிமை உரிமை என்று 30வருடகாலமாக
பேய்க்காட்டி மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்திருக்கிறீர்கள்.
மண்ணையும் மக்களையும் இழந்த பின்பு யாருக்கு இந்த உரிமை வேண்டும்? யாரைப்
பேய்க்காட்டுகிறீர்கள்?
உங்கள் தலைவர்கள் வருகின்ற கூட்டத்தில் தில் இருந்தால் எமக்கு
10கேள்விகள் கேட்கச் சந்தர்ப்பம் தாருங்கள். அதன் பிறகு தெரியும்.
உண்மையும் நேர்மையும் ஒருபோதும் அழியாது. சு.கட்சியில் இம்முறை
வலம்வருவோர் எமது வாக்குகளைப்பிரித்து சகோதர முஸ்லிம்களுக்கு தாரைவார்க்க
புறப்பட்டுள்ளனர். அது அவர்களது வயிற்றுப்பிழைப்புக்கு நடாத்தும்
வருடாந்த நாடகம்.மற்றுமொருவர் எத்தனைதேர்தல் வந்தாலும் நானும் கேட்பேன்
என்று சாராயம்கொடுத்து அறிக்கைப்போர் செய்வார். அவரை லஞ்சஊழல்
ஆணைக்குழவிற்கு அனுப்பும்நாள் வெகுதூரத்தில் இல்லை.
யாரோ கொடுக்கும் பணத்தில் மக்களுக்கு உதவிசெய்வதாகக்கூறி முகநூலிலும்
பத்திரிகைகளிலும் விளம்பரம் தேடும் பினாமிகள் அல்ல நாங்கள். எத்தனையோ
பிள்ளைகளின் கல்விக்காக என்றும் பல கோடிருபா உதவிகளை எந்தவிளம்பரமும்
இல்லாமல் வழங்கிவரும் வேட்பாளர் நந்தகுமாரோடு இந்தப்பினாமிகளை
ஒப்பிடமுடியுமா?
எனவே எதிர்காலசந்ததியாவது இந்த மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக
வாழவேண்டுமாகவிருந்தால் தேர்தலுக்கு மட்டும் வந்துவிட்டு ஓடிஒளியும்
தேர்தல் பருவகால வியாபாரிகளுக்கு வாக்களியாமல் எமது மண்ணின்மைந்தர்களின்
மீன் சின்னத்திற்கு வாக்களித்து காரைதீவுத்தமிழனின் இருப்பைத்
தக்கவைத்துக்கொள்ளுங்கள். என்றார்.