மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதச்சுவடுகள் கண்டி தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.


க.கிஷாந்தன்-
ஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க அவர்களின் தலைமையிலான குழு 23.01.2018 அன்று அந்த இடத்துக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அந்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்ற பரிமாணங்களையும் அளவீடு செய்தனர். இந்த பாதச்சுவடுகள் தொடர்பாக உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும், கண்டிக்கு சென்று மேலும் இது தொடர்பாக ஆராய்ந்த பின் முழுமையான அறிக்கையொன்றை பெற்றுத்தருவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறான போதிலும் இந்த பாதங்கள் அனுமான் கடவுளின் பாதச்சுவடுகள் என தெரிவித்து பிரதேச மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பிரதேச வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த 1ம் திகதி கனவில் அனுமார் தோன்றி தனக்கு காட்சியளித்ததாகவும், அவர் இந்த பிரதேசத்தில் உறைந்துள்ளதாக தெரிவித்ததாகவும் அதனைத்தொடர்ந்து குருக்களிடம் இந்த பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட போது பாதங்களை கண்டதாகவும் பாதங்கள் அனுமான் பாதமாக இருக்கலாம் என உறுதியாக தெரிவிக்கின்றனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -