அட்டாளைச்சேனைக்கான தேசிய பட்டியல் நியமனத்திற்கு நன்றி கூறும் சட்டத்தரணி கபூர்



ட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் நியமனப்பிரதிநிதி ஒன்று வழங்கப்படவேண்டுமென சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களிடம் நான் முதன் முதலாக இக்கோரிக்கையை என் சார்பிலும், எனது ஊரின் சார்பிலும் முன்வைத்தவன் என்பதையும் அப்போது வந்த கட்சியின் முதலாவது தேசியப்பட்டியலில் முதல் இடத்திலிருந்து இதுவரையும் வந்த எல்லா தேசியப்பட்டியலிலும் எனது பெயர் இருந்து வந்தவன் என்ற வகையில் இன்று நான் மகிழ்ச்சி அடைகின்றேன் எனக் கூறுகின்றார் இக்கட்சியின் ஆரம்ப பொதுச்செயலாளரும் இத்தேசியப்பட்டியிலின் வேட்பாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள்.

அன்று பலருக்கு தெரியாமல் இருந்த இந்த தேசியப்பட்டியல் நியமனம் பற்றி முதன் முதலில் அட்டாளைச்சேனைக்கு அறிமுகப்படுத்திவைத்தவன் அடியேன் என்பதனால் இன்று பரவலாக பல வருடங்களாக பேசிவந்த இந்த பதவி இப்போதாவது என் கண் முன் என் மண்ணுக்கு கிடைத்ததையிட்டு நான் மட்டட்ட மகிழ்ச்சியடைகிறேன். அதனை எமது ஊருக்கு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு இப்பிரதேச மக்கள் சார்பாக முதலில் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இக்குறிப்பிட்ட தேசியப்பட்டியலுக்கு உரிமையும், உரித்தும், சிரேஸ்ட உறுப்புரிமையும் சகல தகுதியும் எனக்கிருந்தபோதிலும் இது எனக்கு இப்பொழுது வழங்காததையிட்டு நான் மிக மனவருத்தம் அடைந்தாலும் மறுபக்கத்தில் எப்படியும் எனது ஊருக்கு இது கிடைத்ததையிட்டு நான் இக்கட்சிக்கு கடமைப்பட்டுள்ளேன் எனவும் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -