கிழக்கு மாகாண பாடசாலைகளில் கை விரல் அடையாப்பதிவு இயந்திரம்!!



அப்துல்சலாம் யாசீம்-

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கை விரல் அடையாப்பதிவு இயந்திரம் பாவிப்பதினால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லையென கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

சகல பாடசாலைகளிலும் உள்வருகை மற்றும் வௌிச்செல்கையை உறுதிப்பதுத்துவதற்காக விரல்அடையாள பதிவு இயந்திரங்களை உபயோகப்படுத்துமாறு கடிதம் மூலம் சகல வலயக்கல்வி திணைக்களங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் விரலடையாளப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துமாறு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை கடிதத்தின் பிரதியுடன் அனைத்து வலயங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
பாடசாலைகளில் கைவிரல் அடையாள இயந்திரம் பாவிப்பதினால் பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லையெனவும் ஆரம்பத்தில் உள்வரும் வௌிவரும் நேரத்தை கையால் ஒப்பமிட்டதை தற்போது இயந்திரம் மூலம் செய்வதுதான் எனவும் இதனால் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லையெனவும் கடந்த காலங்களில் பாடசாலைக்கு காலை 7.30மணிக்கு வருகை தந்த ஆசிரியர்களே தற்போதும் அதே நேரத்திற்கு வருவதாகவும் தெரிவித்த கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கை விரல் இயந்திரம் பொருத்தப்பட்டமை தொடர்பில்

மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.



இதேவேளை கைவிரல் அடையாள இயந்திரம் வாங்குவதற்கு

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தில் பணம் இல்லையென்றால் சங்கங்த்தின் கணக்கறிக்கையுடன் கல்வி திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -