இரட்டைக்கொடிக்கு வாக்களித்து தேசிய சக்தி ஒன்றை உருவாக்குவோம்!!




ஹஸ்பர் ஏ ஹலீம்-

முள்ளிப் பொத்தானையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அறைகூவல்

க்களுடைய தேவைகளை வீதியில் இறங்கி போராடி வெல்லும் காலத்தை மாற்றியமைக்கும் சக்தியாக தேசிய சக்தியை உருவாக்குவதற்காக இரட்டைக் கொடிக்கு வாக்களியுங்கள் என நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் சனிக் கிழமை(13) முள்ளிப் பொத்தானையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெருவது என்பது ஒவ்வொரு கட்சிக்கும் ஆவலாக இருக்கும் எதிர்பார்ப்பாகும் .அரசியல் அதிகாரத்தை தக்கவைக்கும் நோக்கில் போட்டியாக இருக்கும் காலமாக இக்கால கட்டம் இருக்குமளவுக்கு இத்த தேர்தல் விளங்குகின்றது அரசியல் அதிகாரம் என்பது மக்களின் வாக்குப் பலத்தினாலே கிடைக்கப் பெறுகிறது ஆனால் தேர்தல் முடிவுற்றதும் மக்களை மறந்து விடுகிறார்கள் இந்தப் பிரதேசம் பல்வேறு பட்ட வகையில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகிறது பல தேவைப்பாடுகள் உள்ளது கல்வி அபிவிருத்தி தொழில் விருத்தி உட்பட பல பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை கண்டு கொள்ள ஆசைப்படுகின்றது 

நாங்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி 20 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுகிறோம் சுயமாக தன்னிச்சையாக களமிறங்கியிருக்கிறோம் அதிலும் இந்த பிரதேசமும் ஒன்று கடந்த காலங்களில் மக்களாகிய நீங்கள் பல வாக்குகளை மாகாண சபை பொதுத் தேர்தல் போன்றவற்றிற்காக அளித்திருப்பீர்கள் ஆனாலும் கூட அந்த வாக்குகளினால் மக்கள் அடைந்த பலா பலன்களை ஒரு கனம் தற்போது மீக்டிப் பார்க்க வேண்டும் எமது கட்சி சார்பான பிரதிநிதிக்கும் கனிசமான பங்களிப்பினை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.மக்களுடைய சக்தியை இந்த தேர்தல் நிரூபித்துக் காட்டவேண்டும் எவ்வாறு நிரூபித்துக் காட்டுவது அது தான் மக்களுடைய வாக்குப் பலத்தைக் கொண்டு நிரூபனம் செய்ய முடியும் ஒவ்வொருவரும் தங்களது வட்டாரங்களை கோட்டைகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அது அவ்வாறால்ல கோட்டைகளுக்கு சொந்தக்காரர்கள் மக்கள் மக்களள்தான் அரசியல் அதிகார சக்தியாக மாற்றுகின்ற வல்லமை படைத்தவர்கள் எந்தவொரு அரசியல்வாதியும் சொந்தக்காரர்களல்ல என்பதை மக்கள் இம் முறை அளிக்கும் வாக்குப் பலம் மூலம் புரிய வைக்க முடியும்

இந்த தேர்தலின் வாக்குகள் மாவட்டத்திலும் தேசிய மட்டத்திலும் தாக்கம் செலுத்துகிற பலமாக அமைய வேண்டியுள்ள காட்டுமளவுக்கு வாக்குகளை அளிப்பதன் ஊடாக மக்களுடைய அபிலாஷைகளை பெற முடியும்.மக்களுடைய அதிகாரங்களினூடாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது தேர்தலின் ஊடாக மக்கள் மாற்றத்தை உண்டாக்க முடியும் எனவே தான் தேசிய மட்டத்திலூம் மக்களுடைய தாக்கங்களை ஒன்று திரட்ட வேண்டிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையும் எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னனிக்கு இருந்து கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலைப் பொறுத்த மட்டில் ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல கட்சிகள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன பதவி வாய்ப்புக்கள் எல்லாம் தருகிறோம் என்று கூறிய வேலையிலும் நாங்கள் பேரம் பேசவில்லை மறுத்து விட்டு தனித்துவமாக சுயாதீனமாக தேர்தலில் இறங்கியிருக்கிறோம் பேரம் பேசியிருந்தால் அவர்கள் கேட்டது தங்களது கட்சிகளுக்கு வாக்குகளை பெற்றுத் தாருங்கள் என்றார்கள் இதைவிடுத்து நாட்டு மக்களுடைய எமது சமூகத்தின் தேவை கருதி மக்களின் சக்தியை தனித்துவ சக்தியாக மாற்றுவதற்கு மக்களுடைய ஆணையைப் பெறுவதற்கு தனித்துவமாக களமிறங்கியிருக்கிறோம் .

தற்போதைய கால கட்டம் புதிய யாப்பு முறைமை புதிய தேர்தல்கள் பூதிய கட்சிகள் என காணப்படுகிறது அன்றைய பாராளுமன்றத்தில் திருத்தச் சட்டத்தில் மக்களுக்கு அதாவது முஸ்லீம் சமூகத்துக்கு பாதகம் என்று கூட தெரிந்தும் முஸ்லீம் கட்சிகள் சட்ட மூலத்தை அங்கீகரித்திருக்கிறார்கள் எமது முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவோர்கள் பயந்து பயந்து குரல் கொடுக்கிறார்கள் பேசுவதற்கு தயக்கத்தை காட்டுகிறார்கள் எதிர்வரும் காலங்களில் வருவதற்கு காத்திருக்கின்ற மாகாண சபை தேர்தல்கள் எமது மக்களுக்கு பாதிப்பாக அமைகிறது முஸ்லீம் பிரதிநிதித்துவம் குறைவடைகிறது வடகிழக்கு பற்றி பேசுவதற்கு யாருமில்லை தயங்குகின்றவர்கள் மக்களுடைய விடயத்திலும் பேசுவதற்கு பாராளுமன்றிலே தயங்குகிறார்கள் எமது கட்சி தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல சர்வதேச மட்டத்திலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி சமூகத்துக்காக எமது மக்களுக்காக என்றும் குரல் கொடுக்கும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -