ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கல்லெறிக்கு மத்தியில் தனது உரையினை நிறுத்தாமல் உணர்ச்சியாக உரையாற்றிய அமைச்சர் றிசாட்
கல்முனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்தி கல்முனை மாநகர ஆட்சியினை கைப்பற்ற நோக்குடன் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம் வேட்பாளர் மனாஃப் தலைமையில் நேற்று இரவு 06.12.2017 சனிக்கிழமை நல்லிரவு ஒரு மணி வரைக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய கோட்டையான கல்முனை குடியில் பெரும் திரளான மக்கள் வரவேற்புடன் இடம் பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டைக்குள் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்காக திரண்டிருந்த மக்களை பார்த்த பொழுது அடுத்த கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தலைமைத்துவம் அமைச்சர் றிசாட் பதுர்டீன் கையில் கிடைப்பதற்கு இன்னும் சிறிது காலம்தான் பாக்கி இருக்கின்றது என்பதனை தெளிவு படுத்துவதாகவும் அதனை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக பெரும் முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக மர்ஹும் அஸ்ரஃபிற்கு எவ்வாறு கல்முனைகுடி மக்கள் உணர்ச்சி பூர்வமாக ஆதரவைனை வழங்கி கெளரவித்தார்களோ அதே போன்ற ஓர் நிகழ்வினையே குறித்த பொதுக்கூட்டமும் எடுத்துக்காட்டியது.
மேலும் அமைச்சர் றிசாட் பதுடீன் உரையாற்றி கொண்டிருக்கும் பொழுது சில கற்கள் இனம் தெரியாத விதத்தில் மேடையை நோக்கி எறியப்பட்டும் அமைச்சர் றிசாட் பதுர்டீன் தனது உரையினை நிறுத்தாமல் உணர்ச்சி பூர்வமாக உரையாற்றியமை மேலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றதோடு, கல்முனைகுடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசினை எதிர்வருகின்ற தேர்தலில் அங்கீகரித்து வெற்றியடைய செய்யும் முடிவினை எடுத்து விட்டார்கள் என்பதனையும் உறுதிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தமை அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.
எல்லா வற்றுக்கும் மேலாக முப்பது வருட காலமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியில் அரும் பாடுபட்டவரும், இஸ்தாபக தலைவர் அஸ்ரஃபுடன் இணைந்து கல்முனை குடியினை முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக வைத்திருப்பதற்கு முக்கிய காரண கர்த்தாவாக செயற்பட்டவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் , உயர் பீட உறுப்பினருமான ஜவாத் அப்துர் ரசாக் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து மக்கள் மத்தியில் தோன்றும் முதலாவது பொதுக்கூட்டம் என்ற வகையில் குறித்த கூட்டத்திற்கு மக்கள் அலையாக வருகை தந்திருந்தமையும் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. எது எப்படி இருந்தும் கிழக்கு முஸ்லிம்களின் அடுத்த தலைமை றிசாட் பதுர்டீன் என்பதை உறுத்திப்படுத்துவது மக்கள் வாக்களிக்கின்ற நிலைமையினை பொறுத்தே அமையப்போகின்றது என்பது மட்டுமே உண்மையான விடயமாகும்.
குறித்த பொதுக்கூட்டம் இடம் பெற்ற நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது