தலவாக்கலை பி.கேதீஸ்-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்ட தொழிற்சாலைக்கு அருகாமையில் 23.1.2018 செவ்வாய்கிழமை இரவு கனரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தேயிலை தூள் பைக்கற்றுக்களை ஏற்றி வருவதற்காக தலவாக்கலை பகுதியிலிருந்து 23.1.2018 சனிக்கிழமை இரவு 8 மணியளவில் லிந்துலை பகுதிக்கு சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.எதிரே வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றுக்கு இடமளிக்கும் போது வாகன சாரதி குறித்த வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -