தோட்ட நிர்வாகத்தை எதிர்த்து எதிர்ப்பு நடவடிக்கை

க.கிஷாந்தன்-

டுல்சீமை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் மடுல்சீமை நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை 22.01.2018 அன்று காலை தோட்டத்தின் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதில் அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
வெஞ்சர் தோட்டம் நிர்வாகம் அத்தோட்டத்தின் தொழில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பாவனைக்கு உதவாத வகையிலான பழமையடைந்த டெக்டர், மற்றும் லொறிகளை சேவையில் ஈடுப்படுத்துகின்றது.

இவ்வாறு சேவையில் ஈடுப்படுத்தும் வாகனங்களளுக்கு சாரதி பயிற்சி குறைவான சாரதிகளை சேவையில் நிர்வாகத்தினர் அமர்த்துகின்றதை சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள் அண்மையில் அத்தோட்டத்தில் இடம்பெற்ற டெக்டர் விபத்தையும் சுட்டி காட்டியே எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அதேவேளையில் பழமையான வாகனத்தில் பயணித்து தமது கடமைகளை முன்னெடுக்கும் தொழிலாளர்கள் உயிராபத்துகளுக்கு ஆளாககூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே பழைய வாகனங்களை மாற்றுமாறும் பதிய வாகனங்களை நிர்வாகம் தொழில் சேவையில் ஈடுப்படைத்த வேண்டும் எனவும் கோரிக்கையை தொழிலாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு வருகைதந்த தொழிற்சங்க பிரதநிதிகளிடத்தில் தோட்ட நிர்வாகம் பேசியதை அடுத்து நிர்வாகம் ஒர் உடன்பாட்டுக்கு வந்ததால் தற்காலிகமாக எதிர்ப்பு நடவடிக்கையை தொழிலாளர்கள் கைவிட்டுள்ளனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -