இலங்கையில் பின்னோக்கிப் பயணிக்கும் அரசியலில் பொதுமக்களுக்கு எப்போதும் ஏமாற்றங்களே அதிகம் கிடைக்கின்றன.

பி.எம்.எம்.ஏ.காதர்-

லங்கை அரசியல் நாளுக்கு நாள் பின்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்ற சூழலில் பொதுமக்களுக்கு எப்போதும் ஏமாற்றங்களே அதிகம் கிடைக்கின்றன. இதனால் சிறந்ததொரு அரசியல் கலாச்சரத்தை,அரசியல் முன்மாதிரியை காண்பதற்காக பொது மக்கள் எல்லோரும் எங்குகின்றார்கள் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மருதமுனை 3ஆம் வட்டார வேட்பாளர் தாஜூதீன் முகம்மது முபாரிஸ் தெரிவித்தார்.

மருதமுனையில் சனிக்கிழமை(20-01-2018)நடைபெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது :-

ஒவ்வொரு தேர்தலின் போதும்; பொதுமக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதிகள் மக்களுக்கு விசுவாசமாகவும்,மக்களுகான அரச ஒதுக்கீடுகளை மக்களுககாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றே பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

தேர்தல்கள்; மூலம் மக்களினால் கிடைக்கும் அதிகாரத்தை மக்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் நல்ல அரசியல் தலைமைகளையும்,கட்சிகளையும் பொது மக்கள் நாளாந்தம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஏமாற்றமே கிடைக்கின்றது.மக்கள் வாழும் பிரதேசங்களில் நீண்ட காலமாக நிலவுகின்ற சமூகப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசியல்வாதிகள் பொடுபோக்குக் காட்டிவருகின்றனர்.

இப்போது நாட்டில் பல பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை,கலாச்சாரச் சீர்கேடுகள் மிகவும் வேகமாகப் பரவிவருக்கின்றது.இதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு எந்த அரசியல் வாதியும் முன்வருவதில்லை.இப்படி எத்தனையோ பிரச்சினைகளை காலா காலமாக எதிர்கொண்டு வருகின்ற பொது மக்கள் தொடர்ந்தும் இப்படியான அரசியல் வாதிகளையே அதிகார மையங்களுக்கு அனுப்பிக் கொண்டிருப்பது ஆக்கபூர்வமான விடையமல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவை மட்டுமல்ல பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னும் முக்கியமான விடையங்கள் இருக்கின்றன பாதைகளை சீரமைப்பதும்,வீதி விளக்குகளைப் பொருத்துவதும் மாத்திரம் உள்ளுராட்சி சபைகளின் பொறுப்புக்கள் என்ற தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகின்றன.

எனவே இந்த வகையில் உள்ளுராட்சி சபைகளின் ஊடாக உச்ச கட்ட பயனைப் பெற்று நமது பிரதேச மக்களின் சுபீட்சமான வாழ்வுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்;டும் என்பதுதான் எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏக இலக்காகும்.இந்த இலக்கை சாத்தியப்படுத்தவதற்காகவே மக்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -