என் மூச்சுக்காற்றில் இருந்து
மௌன இராகம் இசைத்து
நாடிநரம்புகள் புடைக்க
நாட்டியமாடும் உன்னை
பிரிந்து செல்ல முடியவில்லை.
நினைவுகளெல்லாமே நீயாகி
உனக்குள் நானும்
எனக்குள் நீயுமாய்
இணைந்த உன்னை
இனியும் பிரியமனமில்லை.
எதிலும் எங்கும்
என்னோடு இணைந்த
இரும்புச்சங்கிலியாய்
இதயத்தில் நீ
இருப்புக்கொண்டுவிட்டு
ஏனிப்போது நீ
இதயத்தை வதைக்கிறாய்
உயிரோடு உயிராய்
உறவுகொண்டு
உணர்வுகளில் உலாவரும்
உன்னை ஒருநிமுடம்கூட
பிரிந்திடவே முடியவில்லை
பிரிந்திடாதே
பட்டமரமாய் நான்
பாழடைந்து போவேன்.
மௌன இராகம் இசைத்து
நாடிநரம்புகள் புடைக்க
நாட்டியமாடும் உன்னை
பிரிந்து செல்ல முடியவில்லை.
நினைவுகளெல்லாமே நீயாகி
உனக்குள் நானும்
எனக்குள் நீயுமாய்
இணைந்த உன்னை
இனியும் பிரியமனமில்லை.
எதிலும் எங்கும்
என்னோடு இணைந்த
இரும்புச்சங்கிலியாய்
இதயத்தில் நீ
இருப்புக்கொண்டுவிட்டு
ஏனிப்போது நீ
இதயத்தை வதைக்கிறாய்
உயிரோடு உயிராய்
உறவுகொண்டு
உணர்வுகளில் உலாவரும்
உன்னை ஒருநிமுடம்கூட
பிரிந்திடவே முடியவில்லை
பிரிந்திடாதே
பட்டமரமாய் நான்
பாழடைந்து போவேன்.