சம்மாந்துறையின் வரலாற்றினை உண்மைக்கு புறம்பாக கூறி சம்மாந்துறை மக்களின் மனதினை புன்படுத்தியுள்ளார் நெளசாட் மஜீத் (வீடியோ)



ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ண்மையில் சம்மாந்துறையில் இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதான பிரச்சார கூட்டத்தில் சபைக்கான தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்ற நெளசாட் மஜீத் ஆற்றிய உரையானது சம்மாந்துறை மக்களின் மனங்களில் வேறூண்டி எதிர் அலையினை தோற்றுவித்துள்ளது.

ஏன் என்றால் சம்மாந்துறையின் பூர்வீகம், சம்மாந்துறையினுடைய வரலாறு, போன்றவற்றினை கேள்வி ஞானத்தினை மட்டும் வைத்துக்கொண்டு வழங்கிய அரசியலுக்கான மேடை பேச்சாகவே அது பார்க்கப்படுகின்றது. சம்மாந்துறை மண்ணை நேசிக்கும் ஒருவர், அங்கே தேர்தல் கேட்கின்ற ஒருவர், சம்மாந்துறையின் பூர்வீகத்தினை அறிந்துகொள்ள வில்லை என்பது பற்றி மிகவும் கவலையாக இருக்கின்ற அதே இடத்தில் நகைச்சுவையான விடயமாகவும் பார்க்கப்படுகின்றது என நாபீர் பெளண்டேசைன் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.

மேலும்… குறித்த விடயம் சம்பந்தமாக நாபீர் பெளண்டேசன் மிகவும் ஆழமாக சிந்திக்க தொடங்கியுள்ளது. ஏன் என்றால்.? சம்மாந்துறையானது பூர்வீகமாக தமிழ் சமூகத்திற்கு சொந்தமானது என நெளசாட் கூறியிருப்பதானது எல்லோராலும் மறுக்க கூடிய விடயமாக பார்க்கப்படுகின்றது. இது சம்பந்தமாக சம்மாந்துறையில் உள்ள படித்த சமூகம், இளைஞர்கள் என முக நூல்களில் மிகவும் ஆழமாக தமது கருத்துக்களை தெரிவித்து வருவதனை பார்க்ககூடியதாக இருக்கின்றது.

உண்மையில் சம்மாந்துறையின் பூர்வீகம் எவ்வாறு இருந்தது என்பது பற்றி முக நூல்களில் கருத்து தெரிவிக்கும் சகோதரர்களை நாங்கள் வரவேற்கின்றோம். சம்மாந்துறையின் வரலாறு என்பது நேற்று இன்று உருவாக்கப்பட்டதல்ல. சம்மாந்துறை வரலாறு என்பதற்கு தனிப்பெறும் மகத்துவம் இருக்கின்றது. இதனை நன்கு விளங்காத நெளசாட் மஜீத் தான் 1800 தமிழ் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக சுயநலமான உரையினை நிகழ்த்தி ஒட்டு மொத்த சம்மாந்துறையில் வாழும் 40000 க்கும் அதிகமான முஸ்லிம்களின் மனதினை புன்டுத்தியிருப்பதானதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சம்மாந்துறை முஸ்லிம்களின் வரலாறு சம்பந்தமாக ஆழமக முகநூல்களில் பதிவேற்றப்பட்ட செய்தியினை பார்கின்ற பொழுது.. 1100 வருடங்களுக்கு முன்னர் சோழமன்னன் ராஜேந்திர சோழனால் அழிக்கப்பட கரவாகு முஸ்லிம் தேசத்தின் ஓர் அங்கம் சம்மாந்துறை. ஆக்கிரமிக்கப்பட்ட முஸ்லிம் தேசத்தின் பக்கீர்சேனை, ஆலிம்சேனை, ஆதம் முனை என்ற முஸ்லிம் ஊர்கள் முற்றாக அழிக்கப்பட்டன. அந்த முஸ்லிம்கள் சிங்கள தேசம் நோக்கி இடம்பெயர்ந்தனர். ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் வாழ்ந்தனர். இங்கே 900 வருடங்களுக்கு முன்னரே கலந்தர், சிக்கந்தர் என்ற இறை நேசர்கள் வந்து இருந்த முஸ்லிம்களுடன் வாழ்ந்துள்ளார்கள்.

700 வருடங்களுக்கு முன்னர் கண்டி மன்னன் மகலனை திருமணம் செய்ய வந்த சீர்பாத தேவி என்ற ராஜ குமாரியுடன் மதுரையில் இருந்து அனுப்பப் பட்ட பல சாதிகளையும் சேர்ந்த 14 பேர் தான் சம்மாந்துறை துறைமுகத்தின் காவல் அரணான ''வீரர் முனையில்" குடியேறினர். இராஜ குமாரி கண்டிக்கு சென்று விட்டாள். வீரர் முனை...ஏற்கனவே இருந்த இடம். துறைமுகம் ஏற்கனவே இருந்த இடம். இந்தத் துறைமுகத்திலேயே அவர்கள் வந்து இறங்கினர். 550 வருடங்களுக்கு முன்னர் சம்மாந்துறைக்கு ராஜேந்திர சோழனால் இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் சிலர் ''மீள் குடியேற்றப்பட்டனர்".

ஆரம்ப காலத்தில் எமது முஸ்லிம் தேசம் சன்னாதிபர (பொலொன்னறுவ) மன்னனின் அரசாட்சியின் கீழ் கரவாகு முஸ்லிம் தேசமாக இருந்தது. பின்னர் அது கண்டி மன்னரின் ஆட்சியின் கீழ் வந்தது. கண்டி இராச்சியத்தின் பிரதான துறைமுகமாக சம்மாந்துறை திகழ்ந்தது. ஆக- சம்மாந்துறையின் ஆதிக் குடிகள் முஸ்லிம்களே. வீரமுனையில் குடியேறியவர்கள் இந்தியத் தமிழர்களே. எங்கள் வரலாறு 1000 வருடங்களுக்கு மேற்பட்டது. தமிழர் வரலாறு 700 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பமாகின்றது 550க்கு முன்னர் நடந்தது முஸ்லிம்களின் ஒரு "மீள் குடியேற்றம்.

இவ்வாறு மிகவும் ஆழமாக குறித்த முகநுல்ல் பதிவேற்றி குறிப்பட்டுள்ல விடயத்தினை பார்க்கின்ற பொழுது சரித்திரம் பற்றி படியாதோர், ஆராயாதோர், சரித்திரத்தை கேள்வி ஞானத்தில் பேசுவோர், சம்மாந்துறையில் வாழாதோர், சம்மாந்துறையில் படிக்காதோர், சம்மாந்துறையில் தமது பிள்ளைகளை படிப்பிக்காதோர் சம்மாந்துறையின் சரித்திரம் பற்றி பேசுவது வேடிக்கை என்பதும் அது தலைமை வேட்பாளராக இருந்து 1800 மகக்களினது வாக்குகளை பெற்றுகொள்வதற்காக கடந்த கூட்டத்தில் உரையாற்றி நெளசாட் மஜீதுக்கு முற்றிலும் பொருந்தும் என உதுமான் கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.

ஊடகப்பிரிவு- நாபீர் பெளண்டேசன்


வீடியோ நெளசாட் மஜீத் எதை பேசினார்:- 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -