காரைதீவு மண்ணை மாற்றானுக்கு தாரைவார்ப்பதற்கு இந்த கூட்டமைப்பினர் யார்?


மீன்சின்ன வேட்பாளர் குமாரசிறி ஆவேசம்!
காரைதீவு நிருபர் சகா-

காரைதீவு மண்ணை இம்மண்ணிலுள்ள புத்தியீவிகளிடம் கலந்துரையாடாமல் மாற்றானுக்கு தாரைவார்ப்பதற்கு இந்த கூட்டமைப்பினர் யார்?
காரைதீவில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் இறுதி தேர்தல் நடைபெறவிருக்கும் பிரதேசசபை தேர்தலாகும். எழுதிவைத்துக்கொள்ளுங்கள்

இவ்வாறு காரைதீவு பிரதேசசபைக்கான தேர்தலி; மீன்சின்னத்தில் பேர்டியிடும் எஜ்.குமாரசிறி ஆவேசத்துடன் கூறினார்.
தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிபோது அவர் மேலும்; கூறுகையில்:

பொத்துவில் தொகுதியிலிருந்து காரைதீவு மக்களின் வாக்குகளை பிரித்து சம்மாந்துறை தொகுதியுடன் இணைத்து வரலாற்று துரோகமிளைத்தது இந்த கூட்டமைப்பு. தனது அரசியல் இருப்பிற்காக எங்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களுடன் இணைந்து மாகாண எல்லைப்பிரிப்பில் இந்த கொடூரத்தை இந்த காரைதீவு புனித பூமிக்கு தமிழ்தேசியகூட்டமைப்பு தலைமைகளும் துணைபோனது வேதனையாகவுள்ளது.
எதிர்வருகின்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மக்களின் ஏகோபித்த தீர்மானத்திற்கு இணங்க போட்டியிடும் சுயேட்சைகுழு1காரைதீவு பிரதேசசபையின் ஆட்சியை கைப்பற்றும் இதற்காக மக்கள் ஆணை வழங்குவார்கள். ஆனால் காலம் காலமாக தேசியம் பேசிக்கொண்டு தமிழ்மக்களின் வாக்குகளை சூறையாடுகின்ற தமிழ்தேசியகூட்டமைப்பு இந்த காரைதீவு மண்ணில் சபையை இழந்து தோல்வியடைவது உறுதி. அம்பைறை மாவட்டத்தின் பெரும் நிலப்பரப்புடன் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையே பெற்றுக்கொடுத்தது இந்த காரைதீவு மண்.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் அழிக்கப்பட்ட தமிழ்கிராமங்களில் இன்று காரைதீவும் உள்ளடக்கப்படும் அபாயத்தில் உள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களில் காரைதீவான் மாற்றுக்ககட்சிகளுக்கு வாக்களிக்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இவ்வாறாக காரைதீவை சம்மாந்துறை தொகுதியுடன் இணைப்பதானது முஸ்லிம் அரசியல்வாதிகள் வேண்டிநிற்கின்ற கரையோரமாவட்டத்திற்கான முனைப்பாகும்.

நல்லாட்சி அரசில் இணக்க அரசியல் என்ற போர்வையில் தமிழ்மக்களை மாற்று சமூகத்திடம் அடகுவைக்கின்ற மாபெரும் துரோகமே இந்த கூட்டமைப்பால் செய்யப்படுகின்ற சாதனைகளாகும்.
எங்களின் காரைதீவு மண்ணை இம்மண்ணிலுள்ள புத்தியீவிகளிடம் கலந்துரையாடாமல் மாற்றானுக்கு தாரைவார்ப்பதற்கு இந்த கூட்டமைப்பினர் யார்?
இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?

இவற்றை இந்தமண்ணின் மக்கள் சிந்தித்தன் விளைவாக உருவம்பெற்றதே இந்த சுயேட்சைகுழு. எனவே காரைதீவு மண்ணை காரைதீவான் ஆளவேண்டும் இதற்கு ஒட்டுமொத்த காரைதீவு மக்களின் ஆணையோடு இந்த பிரதேசசபையை மீன் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைகுழு கைப்பற்றும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -