வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பதுரியா பள்ளிவாயல் மதில் தனியார் ஒருவரினால் உடைக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் வாழைச்சேனை நீதி மன்றத்திற்கு முன்பாக (திங்கள் கிழமை) கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பதுரியா பள்ளிவாயல் அமைந்துள்ள காணியுடன் இணைந்த காணி தனக்குறியது என்று உரிமைகோறி தனிநபர் ஒருவரால் 2014ம் ஆண்டு வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கள் செய்து வழக்கு இடம் பெற்று வரும் சந்தர்ப்பத்தில் அதற்கான தீர்ப்பு எதிர் வரும் பெப்ரவரி மாதம் இருபதாம் திகதி கிடைக்க இருக்கும் சந்தர்ப்பத்திலே வழக்காளி நேற்று கூலி தொழிலாளிகளை கொண்டு பள்ளிவாயலின் மதிலை உடைத்துள்ளார்.
பள்ளிவாயல் மதில் உடைக்கப்படுவதை அவதாணித்த பிரதேச மக்கள் அதை தடுத்ததுடன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளதுடன் இன்று நீதி மன்றத்திற்கு முன்பாக கவனயீர்பு போராட்டத்தினையும் நடாத்தினார்கள்.
பள்ளிவாயலின் மதிலை உடைத்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதித்துரையை நாங்கள் மதிக்கின்றோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் தெரிவித்தனர் இவ்விடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி தனஜய பெரமுன ஆர்ப்பாட்ட காரர்களிடம் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறியதற்கிணங்க ஆர்ப்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.