உள்ளுராட்சிசபைக்கான இலக்கை நோக்கி.... சாய்ந்தமருதில் மாபெரும் பொதுக்கூட்டம்

 மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தங்களை தாங்களே ஆளவேண்டும் என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களின் போராட்டம், கடந்த நவம்பர் முதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் போராட்டத்தின் ஒரு வடிவான மக்கள் அபிப்பிராயத்தை தேசியத்துக்கும் சர்வதேசத்திற்கும் பறைசாற்றும் வகையில் எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தோடம்பழச் சின்னத்தில் சுயட்சையாக களமிறங்கியுள்ள மக்கள், மக்கள் கடலில் சங்கமிக்கும் நிகழ்வு 2018-01-26 ஆம் திகதி கடற்கரை வீதியில் பௌஸி விளையாட்டு மைதானம் முன்பாக கல்முனை மாநகரசபையின் 4 ஆம் இலக்க தோடம்பழச் சின்ன 19 ஆம் வட்டார வேட்பாளர் முஹர்ரம் பஸ்மிர் தலைமையில் இடம்பெற்றது.

பல்லாயிரக்கணக்கான உணர்வுள்ள மக்கள் கடலாய் சங்கமித்திருந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுயட்சைக் குழுவின் தலைவர் தொழிலதிபர் சமூக சிந்தனையாளர் எம்.எச்.எம்.நௌபர் கலந்து சிறப்பித்தார்.

சாய்ந்தமருதுக்கான தனியானதொரு உள்ளுராட்சிசபை என்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை மூலம் களமிறங்கியுள்ள மக்களின் பிரதிநிதிகள், உலமாக்கள், ஊர்ப்பற்றாளர்கள் மற்றும் உணர்வுள்ள மக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் சமுத்திரத்தின் முன்பாக சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையின் அவசியம் பற்றியும் அதற்கு ஏற்பட்டுள்ள தடைகள் பற்றியும் அதனை முறியடிக்க மக்கள் ஒன்றுதிரள வேண்டியதன் அவசியம் பற்றியும் பேச்சாளர்களால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை பெறும் தூய்மையான நோக்கத்தின் அடிப்படையில் மக்களின் பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருதிலுள்ள 6 வட்டாரங்களையும் வென்று சாய்ந்தமருது மக்களின் ஒற்றுமையை தேசியத்துக்கு காட்டும் செயட்பாடே இது என்றும் சிலர் கூறித்திரிவதுபோன்று உள்நோக்கமோ அல்லது எவரதும் அஜந்தாக்களுக்குமோ தாங்கள் செயற்ப்படவில்லை என்றும் வெற்றி கொண்டு போணஸ் ஆசனத்துடன் பொதுமக்களின் ஆணையைப் பெற்று தேர்தல் முடிந்தாலும் மக்கள் பணிமனை மூலம் சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும். என்ற வாக்குறுதியும் இங்கு வழங்கப்பட்டது.

சபைக்கு வருகைதந்திருந்த அதிதிகளால், மக்கள் ஒருமித்த ரீதியில் எதற்கும் தலைசாய்த்து விடாது வாக்களிக்க வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வின்போது முஹர்ரம் பஸ்மிரின் அனுசரணையுடன் யூ.எல்.அக்பரின் இசையில் மருதூர் பீமாவின் வரியில் யூ.எல்.அக்பர், ஏ.எச்.ஏ.பாஸில், எம்.என்.எம்.சஹ்மி, எம்.ஆர்.ஆஸிக் ஆகியோர் இணைந்து பாடிய மருதூர் எழுச்சிக் கீதம் என்ற எளுவட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -