ரத்தமும் தக்காளி சட்னியும்...

Mohamed Nizous-

ண்ட ஆள் என்றால்
தம்பி "ரத்தம்" என்பார்
அண்ணயின் எதிரி என்றால்
அதன "சட்னி" என்பார்

தான் சார்ந்த கட்சி என்றால்
தப்பெல்லாம் சரியாகும்
ஆனால் எதிர்க் கட்சியென்றால்
ஆவேசம் பொங்கி வரும்

போட்டோ போடுவதிலும்
பொல்லாங்கு பேசுவதிலும்
மேட்டரை நோக்க மாட்டார்
ஆட்களை ஆராய்வார்

நெருங்கிய ஆள் என்றால்
நேரே சேர்ச் பண்ணி
பெரும் பெரும் ஹதீஸெல்லாம்
பேஷ் புக்கில் கொப்பி பண்ணி
புறம் பேசல் பாவம் என்று
அறம் பேசி எதிர்த்து நிற்பார்

ஆனால் அதுவே
அங்காலப் பார்ட்டி என்றால்
எதிர்க்கணும் குற்றங்களை
எங்களின் கடமை என்று
அதற்கும் ஹதீஸ் தேடி
ஆதாரம் எடுத்துப் போட்டு
இதோ பார் போட்டோ என்று
எடுத்துப் போட்டு நிற்பார்.

மார்க்கம் பேசுவதும்
மூர்க்கம் காட்டுவதும்
ஆளுக்கு ஏத்த படி
வேளைக்கு மாறுவதும்...
ஆட்களைக் காணும் போது
ஏற்கல்ல உள மனது.

அடுத்தவனின் மானத்தை
கெடுத்துப் போடுதல்
பாரிய கடும் ஹறாம்
வேறு கருத்தில்லை
ஆனால் அந்த ஹறாம்
ஆளுக்காள் வேறு படுதல்
பேணுகின்ற இஸ்லாத்தில்
காணுகின்ற முறைதானா?

யாராக இருந்தாலும்
நேராக சிந்தித்து
வேறு பாடு காட்டாது
விளங்கி நடப்பதே
சேரும் இறுதி இடத்தை
சிறந்ததாய் ஆக்கி வைக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -