இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடு தூர நேக்குடன் பார்க்க வேண்டும்.


மருதமுனையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.


(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.சினாஸ்,ஏ.டபள்யு,எம்.ஜெஸீல்)

இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடு தூர நேக்குடன் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.இந்த இறுக்கமான சூழ்நிலையில் நன்றாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,வர்த்தக் கைத்தொழில் அமைச்சருமான அமைச்ருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மருதமுனையில் நான்கு வட்டாரங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களான ஏ.நெய்னா முகம்மட்,வை.கே.றகுமான், ஏ.எச்.ஏ.ழாஹிர், சிபான் பஹுறுத்தீன் ஆகியோரை ஆதரித்து மருதமுனை அல்மனார் வீதியில் வெள்ளிக்கிழமை இரவு(19-01-2019) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் றிஷாட் இவ்வாறு தெரிவித்தர்.

முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியும்,சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக்,எம்.ரி.ஹஸன் அலி,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், கே.எம்.அப்துல் றஸாக்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது :-மருதமுனை மண் கல்வியலாளர்களை அதிகம் கொண்டிருக்கிற ஒரு பிரதேசமாகும். பல்துறை சார்ந்த கல்விச் சமூகத்தை நாட்டுக்கு தந்திருக்கின்றது இந்த மருதமுனை மண்.அவ்வாறான இந்த மண்ணிலே இங்குள்ள மக்கள் சார்பாக எம்மோடு நால்வர் களத்திலே நிற்கின்றார்கள்.அவர்களுடைய வெற்றி என்பது இந்த மருதமுனையின் வெற்றியாகப் பார்க்கப்படும்.

நாங்கள் கட்சியை அமைத்து சகோதரர் அமீர் அலி அவர்கள் மட்டக்களப்பிலே பாராளுமன்ற உறுப்பினராகி பிரதியமைச்சராகியிருக்கின்றார்,சகோதரர் இஸ்ஹாக் அவர்கள் அனுராதபுரத்திலே அங்குள்ள மக்களின் ஏகோபித்த ஆரதவுடன் பாராளுமன்ன உறுப்பினராகியிருக்கின்ரார்.

வன்னி மக்கள் எங்களுக்கு ஆணைதந்து இந்த அரசிலே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்தவியைப் பெற்றுத்தந்திருக்கின்றார்கள்.திருகோணமலை மாவட்டத்திலே அப்துல்லா மஹ்றூப் அவர்களை பாராளுமன்ன உறுப்பினராக அந்த மக்கள் தந்திருக்கிறார்கள்.அதே போல புத்தளத்திலே அரசியலிலே நீண்ட கால வரலாறு கொண்ட நவவி அவர்கள் தேசியப் பட்டியலிலே பாராளுமன்றத்திலே அவருடைய பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.

அவ்வாரான எமது கட்சி காலத்தின் தேவையை உணர்ந்து சகோதரர் ஹஸன் அலி அவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர் நேர்மையானவர் சமூகப்பற்றுள்ளவர் அல்லாஹ்வுக்குப் பயந்தவர் இந்தச் சமூதாயத்திற்கென்று தனித்தவமான கட்சியின் பெருந்தலைவர் அஷ்ரபுடன் இணைந்து அவருக்கு பக்கபலமாக இருந்து அவரது கட்டளைகளை செவிமடுத்து செவ்வனே செய்தவர்.அதே போல அந்தத் தலைவரின் மரனத்திற்குப் பின்னர் இந்தத் தலைவர் எனது நபுசு கேட்கிறது கட்சியின் தலைமையை எனக்குத் தாருங்கள் என்று கேட்டுக் பெற்றுக் கொண்ட பொழுது அதன் பிறது இந்தத் தலைவருக்கும் பக்கபலமாக இருந்து இந்தக் கட்சியைக் காப்பாற்றியவர்.

அந்த நல்ல மனிதருக்கு துரோகிப்பட்டம் சூட்டப்பட்டு வெளியெற்றப்பட்டள்ளார் இன்று அவர் செய்த தியாகங்கள் எல்லாம் ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாமல் அவரை மிகவும் மோசமாக விமர்சித்துப் பேசிவருகின்ற அரசியல் கலாச்சாரம் இன்று காணப்படகின்றது.அன்று அதாஉல்லா தொடக்கம் ஹசன் அலி வரை பல சகோதரர்கள் அந்தக்கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் அவர்கள் அத்தனைபேரும் அந்தக்கட்சிக்காகப் பல தியாகங்களைச் செய்தவர்கள்.

சகோதரர் ஜவாத் அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு சொன்னார் உங்கள் கட்சியோடு இணையப் போகின்றேன் என்று.ஏழு தினங்களாக இதைப்பற்றிச் சிந்தித்தேன் இந்தத் தேர்தலிலே சொந்தச் சின்னத்தை இழந்து விட்டு மறந்து விட்டு இந்த அம்பாறை மாவட்டத்திலே பல அநியாயங்களைச் செய்துகொண்டடிருக்கிற ஒரு அரசியல்வாதியைக் கொண்டிருக்கின்ற அந்தக்கட்சியிலே அந்தச் சின்னத்திலே எமது இயக்கம் உருவாகிய மண்ணிலே வருவதையை வேண்டாம் என்று சொன்னேன் அதைமறுத்த இங்கு வந்திருக்கின்றார்கள்.

பொறுத்துப் பொறுத்து கட்சியைக் காப்பாற்றுவோம் என்று அந்தத் தலைவனுடைய கொள்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று மிகவும் தியாகத்தோடு இருந்தேன் இன்னும் என்னால் பொறுக்க முடியவில்லை எனக்கு எதுவும் வேண்டாம் இந்த மண்ணை மக்களை பாதுகாக்க இந்தக் கூட்டமைப்பின் தலைவராக ஹஸன் அலியை ஆக்கியிருக்கின்றீர்களே அது போதும் உங்களுக்குப் பின்னால் நான் வருகின்றேன் என்று சொன்னார் என அவர் மேலும் தெரிவித்தார். 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -