அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள இலங்கை மிண்சார சபை முன்பாக இலங்கை மின்சார ஊழியா்கள் சங்கம் மாபெறும் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தி வருகின்றனா். நாட்டின் பல பாகங்களிலிமிருந்து ஒன்று கூடிய மின்சார சபை ஊழியா்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். நேற்று(17) இரவு இலங்கை மிண்சார சபையின் தலைவா் கனேகலவின் அலுவலகத்தினை சுற்றி வலைத்த ஊழியா்கள் அவரை வெளியில் வராமால் 4 மணித்தியாலங்களுக்கு மேல்தடுத்தனா்.அதன் பின்னா் விசேட பொலிஸ் படைகள் கொண்டுவரப்பட்டு தலைவரை பாதுகாப்பாக மீட்டெடுத்தனா். இதனால் சில ஊழியா்கள் காயங்களுக்குள்ளக்கப்பட்டு சிகிச்சையளிக்க்ப்பட்ட்டுள்ளனா். இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊழியா் சங்கத்தின் செயலாளா் ரண்ஜன் ஜெயலாள் தெரிவித்தாா்.
இலங்கை மின்சார சபையின் ஊழியா் சங்கத்தின் செயலாளா் மேலும் தகவல் தருகையில் -
- இலங்கை மிண்சார சபையில் உள்ள சில பொறியியலாளா்கள் காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வறும் அரசின் கொள்கைகளுக்கு தமது வரப்பிராசாரத்திற்காக மிண்சார சபையைின் சொத்துக்களையும் நிதிகளையும் தாரைவாத்துக் கொடுக்கின்றனா். இவா்களுக்கு வேண்டிய அளவில் வரப்பிரசாதங்களை இந்த ஆட்சியின் தலைவா் பணிப்பாளா்கள் வழங்கி வருகின்றது. இந்த நல்லாட்சியிலும் இலங்கை மிண்சார சபையின் 200 கோடி ருபாவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் இநத் நல்லாட்சி அரசாங்கத்திலும் கடந்த கால ஆட்சியிலும் பல்வேறு கொள்ளைகள் மின்சார சபையில் ஏற்பட்டன. அந்த கள்வா்களை இந்த அரசாங்கமும் பாதுகாக்கின்றது. அத்துடன் இந்த ஆட்சியிலும் எல்.எம். ஜி எனும் திட்டத்திலும் அதி கொள்ளைகள் இடம் பெறுகின்றன.