பிபா உலகக் கிண்ணம் உலக நாடுகளில் முதல் முதலாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அதனை முக்கிய பிரமுகர்களின் பார்வைக்கு வைக்கும் பிரதான நிகழ்வு இன்று (23) செவ்வாய்க்கிழமை இரவு சங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து பிபா உலகக் கிண்ணத்தை திரை நீக்கம் செய்து முக்கிய பிரமுகர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் ஊலக முக்கியத்துவம் வாய்ந்த பிபா உலகக் கிண்ணத்தை இலங்கையில் முதன் முதலாக திரை நீக்கம் செய்த பெருமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசை சாரும்.
இந்நிகழ்வில் பிபா உலகக் கிண்ணத்தை 1998ஆம் ஆண்டு வென்ற பிரான்ஸ் அணி வீரர் கிறிஸ்டியானா தம்ரோ, வெளிநாட்டு தூதுவர்கள், பிபா உலகக் கிண்ண அதிகாரிகள், விளையாட்டுதுறை அமைச்சின் அதிகாரிகள், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கிணணத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் நாளை புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பார்வைக்காக கையளிக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து உதைபந்தாட்ட ரசிகர்களின் பார்வைக்காக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.